முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Bigg Boss 5 : பிரியங்கா - அபிஷேக் பேசுனாலே கடுப்பாகும் அண்ணாச்சி!

Bigg Boss 5 : பிரியங்கா - அபிஷேக் பேசுனாலே கடுப்பாகும் அண்ணாச்சி!

பிக் பாஸ்

பிக் பாஸ்

பிக் பாஸ் வீட்டில் பிரியங்காவின் பரிதாபங்கள்" என செய்தி வாசிக்கப்படுகிறது.

  • Trending Desk
  • 1-MIN READ
  • Last Updated :

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கி தற்போது வெற்றிகரமாக 8 வாரங்களை நிறைவு செய்துள்ளது. இந்த சீசன் 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில் தற்போது சிபி, ராஜு, இமான் அண்ணாச்சி, வருண், நிரூப், அமீர், சஞ்சீவ், அபினய், அபிஷேக், பாவ்னி, பிரியங்கா, அக்ஷரா, தாமரை என 13 போட்டியாளர்கள் வீட்டில் உள்ளனர். இவர்களில் இந்த வார நாமினேஷன் லிஸ்டில், ராஜு, பிரியங்கா, தாமரை, சிபி, இமான், பாவ்னி, அக்ஷ்ரா, வருண், அபினய் மற்றும் அபிஷேக் ஆகிய 10 பேர் உள்ளனர்.

நேற்று திங்கட்கிழமை என்பதால், பிக் பாஸ் வீட்டில் தலைவரை தேர்வு செய்வதற்கான டாஸ்க் நடைபெற்றது. இந்த போட்டியில் இமான் வெற்றி பெற்ற நிலையில், நிலத்தின் நாணயத்தை வைத்து இருக்கும் நிரூப், அந்த நாணயத்தை பயன்படுத்தி அண்ணாச்சியின் தலைவர் பதவியை தட்டிப்பறித்து பிக் பாஸ் வீட்டின் தலைவர் ஆனார். மேலும் இதற்காக இந்த வாரம் முழுவதும் நிரூப் யாரிடம் பேசினாலும், அவர்களின் உயரத்திற்கு கீழே குனிந்து அவர்களின் கண்களை பார்த்து பேச வேண்டும் என்று பிக் பாஸ் தண்டனை கொடுத்துள்ளார்.

இந்நிலையில் இன்று பிக் பாஸ் வீட்டில் "பிக் பாஸ் பிரேக்கிங் நியூஸ்" என்ற டாஸ்க் வழங்கப்படுவது இன்றைய ப்ரோமோக்களில் தெரிகிறது. அதன்படி ப்ளூ டிவி, ரெட் டிவி என போட்டியாளர்கள் இரு குழுவாக பிரிக்கப்படுவதாக பிக் பாஸிடமிருந்து உத்தரவு வருகிறது. "சிங்கத்தின் பிடரியில் ஊஞ்சலாடிய இமான்", "பிக் பாஸ் வீட்டில் பிரியங்காவின் பரிதாபங்கள்" என செய்தி வாசிக்கப்படுகிறது.

அப்போது, பிரியங்கா “எனக்கு இப்போ தான் புரிஞ்சது யார் யாரை இந்த வீட்ல நம்பணும், யார் யாரை நம்பக் கூடாதுன்னு” என்று கூறுகிறார். பின்னர் பிரியங்காவையும், தாமரையையும் உட்கார வைத்து, ’இவங்க என்ன மாதிரியான ஃப்ரெண்ட் உங்களுக்கு’ என்று கேள்வி எழுப்ப, ‘எனக்கு ஃப்ரெண்டே கிடையாது. நம்ம பேச்சு மட்டும் தான் உயர்ந்திருக்கணும், மத்தவங்க எல்லாம் நமக்கு கீழ தான்னு நினைக்கிறது பிரியங்கா தான். நான் எங்க வேணும்னாலும் சொல்வேன்” என தாமரை அதிரடியாக கூறும் காட்சிகள் இருந்தது.

இரண்டாவது ப்ரோமோவில், "இந்த வீட்டில் சில பேர் ஒன்னு பண்ணுறாங்க, அதுக்கப்புறம் பின்னாடி ஒன்று பேசுகிறார்கள்" என பிரியங்கா கூறுகிறார். பின்னர் நீ சிண்டு முடிந்துவிடும், வேலையை நன்கு செய்கிறாய் என தாமரை, பிரியங்காவை கூறுகிறார். பின்னர் பாவ்னியிடம், உன் பேச்சை நான் தட்டி பேசினால் நீ என்னை மட்டம் தட்டி பேசுவியா? நான் நியாயமாக தானே பேசினேன் என கோபமாக பேசும் காட்சிகள் உள்ளது.

' isDesktop="true" id="627749" youtubeid="E1R2jttY4Mg" category="television">

இந்தநிலையில் தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில், நிரூப், இமான் இருக்கின்றனர். அவர்களிடம் கேள்வி எழுப்பும் பிரியங்கா, நீங்கள் கவலையாக இருக்கும்போது உங்களுக்கு மேலும் அழுத்தம் தருவது யார்? என கேட்கிறார். அதற்கு நிரூப், இமான் அண்ணாச்சியை கூறுகிறார்.

பிக்பாஸ் : பிரியங்கா தாமரையை பார்த்து அந்த வார்த்தை சொல்லி திட்டுனாறாமே.. உண்மையா?

இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு இமான் கேட்கிறார். அப்போது குறுக்கிடும் அபிஷேக், செய்திகள் சேகரித்து மக்களிடம் தெரிவிப்பது மட்டுமே பிரியங்காவின் வேலை என்கிறார். அதற்கு பிரியங்கா ஆம் என கூறிவிட்டு செல்லும் காட்சிகள் உள்ளது. மேலும் இந்த பிரச்சனையால் கடுப்பாகும் அண்ணாச்சி இதனை கண்டிக்கிறேன் என கூறிவிட்டு எழுந்து செல்லும் காட்சிகள் உள்ளது. இதனால் இன்றைய டாஸ்க் மோதலுடம் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Bigg Boss Tamil 5, Vijay tv