ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

என்னாச்சு பிக் பாஸ் குழுவுக்கு ? திட்டி தீர்க்கும் ரசிகர்கள்.. இது தான் காரணமா?

என்னாச்சு பிக் பாஸ் குழுவுக்கு ? திட்டி தீர்க்கும் ரசிகர்கள்.. இது தான் காரணமா?

பிக் பாஸ் 5

பிக் பாஸ் 5

பாவ்னி, தாமரை தைரியமாக முன்வந்து ஆடியதை கூட சஞ்சீவ் செய்யவில்லை என்கின்றனர் ரசிகர்கள்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  பிக் பாஸ் சீசன் 5 தற்போது இறுதி கட்டத்தை எட்டி விட்டது. 88 நாட்கள் நிறைவடைந்து விட்டது. பிக் பாஸ் வீட்டில் தற்போது ‘டிக்கெட் டு ஃபினாலே’ டாஸ்க் நடைப்பெற்று வருகிறது. மற்ற 4 சீசன்களில் மிக மிக விறுவிறுப்பாக நடந்த இந்த டாஸ்க், சீசன் 5 ல் மிகப் பெரிய சரிவை சந்தித்துள்ளது. இதனால் ரசிகர்கள் இணையத்தில் பிக் பாஸ் குழுவை திட்டி தீர்க்கின்றனர். டாஸ்க் தொடங்கிய முதல் நாளிலிருந்து இணையத்தில் காரசாரமான விவாதங்கள் தொடர்கின்றன.

  பிக் பாஸ் ஷோவில் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் மிக மிக முக்கியமானது. அதாவது, இறுதி போட்டிக்கு நேரடியாக செல்லும் வாய்ப்பு. மக்கள் ஓட்டுக்காக அந்த போட்டியாளர் 106 நாட்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது. நேரடியாக இறுதி போட்டிக்கு சென்று விடுவார். கடைசியில் அவருக்கு கிடைக்கும் ஒட்டு எண்ணிககையை பொறுத்து அவர் முதல் 3 இடங்களில் பிடிக்கலாம் அல்லது அடுத்த இடங்களுக்கு தள்ளப்படலாம். முழு பலத்தையும் தர இந்த டாஸ்கை ஒவ்வொரு பிக் பாஸ் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்ப்பார்கள்.

  இதையும் படிங்க.. மீனாவால் மீண்டும் அசிங்கப்படும் தனம்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று!

  ஆனால் இந்த முறை பிக் பாஸ் சீசன் 5ல் இந்த டிக்கெட் டு ஃபினாலே டாஸ்கை சரிவர திட்டமிடவில்லை என்கின்றனர் ரசிகர்கள். அதுமட்டுமில்லை கடுமையான டாஸ்குகள் கொடுக்கப்படாமல் கும்பளாக சேர்ந்து ஆடி, போட்டியாளர்க்ளை வெளியேற்றுவது போலவே ஒவ்வொரு ரவுண்டும் அரங்கேறி வருவதாக குற்றமும் கூறப்படுகிறது. இதற்கு முந்தைய சீசனில் போட்டியாளர்கள் ஒவ்வொரு ரவுண்டிலும் குறைவான மதிப்பெண்களை பெறும் வகையில் வெளியேற்றப்படுவார்கள். இந்த முறை 3 அல்லது 4 பேர் ஒன்றாக சேர்ந்து பேசியே போட்டியாளர்களை வெளியேற்றுகின்றனர்.

  ' isDesktop="true" id="653211" youtubeid="aPftBOmAZHQ" category="television">

  அப்படித்தான் முதல் ரவுண்டிலே நிரூப் வெளியேறப்பட்டார். டாஸ்கில் உயிரை கொடுத்தும் ஆடும் நிரூப்பை பேசிய வெளியே அனுப்பியது இந்த விவாதத்திற்கு மைய பொருளாகியுள்ளது. அதே போல் எதுவும் செய்யாமல் சஞ்சீவ் ஒவ்வொரு ரவுண்டிலும் ஜெயிப்பதாக கருத்துக்களும் பகிரப்பட்டு வருகின்றன. பாவ்னி, தாமரை தைரியமாக முன்வந்து ஆடியதை கூட சஞ்சீவ் செய்யவில்லை என்கின்றனர் ரசிகர்கள்.

  இதையும் படிங்க.. மீனாவால் மீண்டும் அசிங்கப்படும் தனம்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று!

  அதே நேரம், இந்த டாஸ்கில் ஆரம்பத்தில் இருந்து அதிக ஈடுபாடு கொண்டு ஆடும் அமீர், இன்று நடைப்பெறும் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்கில் வெற்றி பெற்று நேரடியாக இறுதி போட்டிக்கு சென்று விட்டதாகவும் இணையதளங்களில் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. உண்மை என்ன என்பது இன்றைய எபிசோடில் தெரிந்து விடும்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Sreeja
  First published:

  Tags: Bigg Boss Tamil, Bigg Boss Tamil 5, Vijay tv