பிக்பாஸ்: ஒரே நேரத்தில் 4 பெண்களை காதலிப்பது காமெடியா...! கவினை வறுத்தெடுக்கும் கஸ்தூரி

47-வது நாளான இன்று பிக்பாஸ் நிகழ்ச்சிக்குழு முதல் புரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது.

news18
Updated: August 9, 2019, 10:18 AM IST
பிக்பாஸ்: ஒரே நேரத்தில் 4 பெண்களை காதலிப்பது காமெடியா...! கவினை வறுத்தெடுக்கும் கஸ்தூரி
கஸ்தூரி
news18
Updated: August 9, 2019, 10:18 AM IST
ஒரே நேரத்தில் நான்கு பெண்களை காதலிப்பதாக கூறுவது நகைச்சுவையா என்று பிக்பாஸ் வீட்டில் கவினை கேள்விகளால் வறுத்தெடுக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் 3 நிகழ்ச்சி கடந்த ஜீன் மாதம் தொடங்கி 45 நாட்களை கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டுள்ளது. கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் 16 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டனர்.

இரண்டாவது வார இறுதியில் முதல் நபராக பாத்திமா பாபு வெளியேற்றப்பட்டார். அவரைத் தொடர்ந்து அடுத்த அடுத்த வாரங்களில் வனிதா விஜயகுமார், மோகன் வைத்யா, மீரா மிதுன், ரேஷ்மா மற்றும் சரவணன் உள்ளிட்டோர் வெளியேற்றப்பட்டனர்.


10 போட்டியாளர்களுன் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்காட் போட்டியாளராக நடிகை கஸ்தூரி நேற்று பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்தார். அவரை மற்ற போட்டியாளர்கள் மகழ்ச்சியுடனே வரவேற்றனர்.

முதல் நாளான நேற்று கஸ்தூரிக்கு சிறப்பு அந்தஸ்துகள் கொடுக்கப்பட்டது. அதனை பயன்படுத்தி அவர் வீட்டில் உள்ள மற்ற போட்டியாளர்களுக்கு சில நகைச்சுவையான டாஸ்க்குகளை அளித்தார்.Loading...

இந்நிலையில் இன்று நிகழ்ச்சிக்குழு ஒரு புரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் கஸ்தூரி ஒரே நேரத்தில் 4 பெண்களை காதலிப்பது காமெடியா? என்று கேள்விகளால் கவினை வறுத்தெடுப்பது போன்று உள்ளது.

Also see...

First published: August 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...