பிக்பாஸ் வீட்டைவிட்டு போனாலும் என் காதல் மாறாது... முகேனிடம் காதல் மொழி பேசும் அபிராமி!

அபிராமி உங்களுக்கு இன்றுதான் கடைசி நாள் என்றால் முகேனிடம் என்ன சொல்லுவீங்க என்றும் தர்ஷன் அவரிடம் கேள்வி கேட்கிறார்.

Web Desk | news18
Updated: August 9, 2019, 5:17 PM IST
பிக்பாஸ் வீட்டைவிட்டு போனாலும் என் காதல் மாறாது... முகேனிடம் காதல் மொழி பேசும் அபிராமி!
பிக்பாஸ் போட்டியாளர்கள் அபிராமி மற்றும் முகேன் ராவ்
Web Desk | news18
Updated: August 9, 2019, 5:17 PM IST
பிக்பாஸ் வீட்டை விட்டு போனாலும் என் காதல் மாறாது என்று முகேனிடம் அபிராமி தெரிவித்துள்ளார்.

100 நாட்கள் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 47 நாட்களைக் கடந்துள்ளது. நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி 16 போட்டியாளர்களுடன் தொடங்கியது.

இந்நிகழ்ச்சியிலிருந்து தற்போதுவரை வனிதா விஜயகுமார், சரவணன், மீரா மிதுன், மோகன் வைத்யா, ரேஷ்மா, பாத்திமா பாபு ஆகிய 6 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த வாரம் வெளியேற்றப்படுவோரின் பட்டியலில் அபிராமி, லாஸ்லியா, சாக்‌ஷி ஆகிய 3 பேர் உள்ளனர். இவர்களில் ஒருவர் இந்த வாரம் வெளியேற்றப்படுவார்.


இந்நிலையில் நடிகை கஸ்தூரி வைல்ட் கார்ட் என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார். இன்று வெளியான முதல் 2 புரோமோ வீடியோக்களிலும் கஸ்தூரி கவினை வறுத்தெடுப்பது போன்றே இருந்தது.

Also read... பத்தவச்சிட்டியே பரட்ட...! பிக்பாஸ் வீட்டில் கலகத்தை ஏற்படுத்தும் கஸ்தூரி

இந்நிலையில் தற்போது நிகழ்ச்சிக் குழு 3-வது புரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு ஒரு டாஸ்க் வழங்கப்படுகிறது.

Loading...

அப்போது, “ அபிராமி உங்களுக்கு இன்றுதான் கடைசி நாள் என்றால் முகேனிடம் என்ன சொல்லுவீங்க” என்று தர்ஷன்  கேள்வி கேட்கிறார்.

அதற்கு பதிலளித்த அபிராமி, முகேன் உன்கூடவே இந்த வீட்டில் இருந்து வெளியில் போகனும்னு நினைச்சன். நீ இந்த போட்டியில ஜெயித்திட்டு வெளிய வரனும். பிக்பாஸ் வீட்ட விட்டுட்டு வெளிய போனாலும் என் காதல் மாறாது. எப்பவும் உன்ன காதலிச்சுட்டேதான் இருப்பேன் என்றும் காதல் மொழியில் அவர் தெரிவித்தார்.

Also see...

First published: August 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...