பத்தவச்சிட்டியே பரட்ட...! பிக்பாஸ் வீட்டில் கலகத்தை ஏற்படுத்தும் கஸ்தூரி

இந்த வாரம் வெளியேற்றப்படுவோரின் பட்டியலில் அபிராமி, லாஸ்லியா, சாக்‌ஷி ஆகிய 3 பேர் உள்ளனர்.

news18
Updated: August 9, 2019, 12:50 PM IST
பத்தவச்சிட்டியே பரட்ட...! பிக்பாஸ் வீட்டில் கலகத்தை ஏற்படுத்தும் கஸ்தூரி
பிக்பாஸ் போட்டியாளர்கள்
news18
Updated: August 9, 2019, 12:50 PM IST
கவினுக்கு பெயரில் வின் இருந்தாலும் மனசு முழுக்க லாஸ்ச தான் விரும்புது என்று பிக்பாஸ் வீட்டில் கலகத்தை ஏற்படுத்துகிறார் கஸ்தூரி.

100 நாட்கள் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 47 நாட்களைக் கடந்துள்ளது. இந்நிகழ்ச்சியிலிருந்து தற்போதுவரை வனிதா விஜயகுமார், சரவணன், மீரா மிதுன், மோகன் வைத்யா, ரேஷ்மா, பாத்திமா பாபு ஆகிய 6 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

Also read... பிக்பாஸ்: ஒரே நேரத்தில் 4 பெண்களை காதலிப்பது காமெடியா...! கவினை வறுத்தெடுக்கும் கஸ்தூரி


இந்த வாரம் வெளியேற்றப்படுவோரின் பட்டியலில் அபிராமி, லாஸ்லியா, சாக்‌ஷி ஆகிய 3 பேர் உள்ளனர். இவர்களில் ஒருவர் இந்த வாரம் வெளியேற்றப்படுவார்.

இந்நிலையில் நடிகை கஸ்தூரி பிக்பாஸ் வீட்டில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைந்துள்ளார். உள்ளே வந்த கஸ்தூரிக்கு ஸ்பெஷல் பவரை பிக்பாஸ் அளிக்கிறார். அதனை வைத்து ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தண்டனை கொடுத்தார் கஸ்தூரி.

இந்நிலையில் இன்று பிக்பாஸ் நிகழ்ச்சிக்குழு இரண்டாவது  புரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் கவின் பெயரில் வின் இருந்தாலும் அவர் மனசு லாஸ்ஸை தான் விரும்புகிறது என்று கூறுகிறார்.

Loading...உடனே சாக்ஷியின் முகம் மாறுகிறது, கஸ்தூரி விளையாட்டுக்கு இப்படி சொன்னாரா, அல்லது வீட்டில் கலகத்தை ஏற்படுத்துவதற்காக இவ்வாறு கூறினாரா? என்பது இன்றைய முழு எபிசோடை பார்க்கும் போது தெரியவரும்.

Also see...

First published: August 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...