லாஸ்லியா தந்தை எப்புடி! கவினுக்கு பாடம் புகட்டிய கமல்ஹாசன்

லாஸ்லியா தந்தை எப்புடி! கவினுக்கு பாடம் புகட்டிய கமல்ஹாசன்
பிக்பாஸ்
  • News18 Tamil
  • Last Updated: September 14, 2019, 6:48 PM IST
  • Share this:
ஒரு அப்பாவாக லாஸ்லியாவின் தந்தை என்னை விட சிறந்தவர் என்று கமல்ஹாசன் பாராட்டி உள்ள புரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

100 நாட்களுக்கு ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 80 நாட்களை கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டுள்ளது. ஒவ்வொரு பிக்பாஸ் சீசனிலும் 75 நாட்களை கடந்த பிறகு வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு ஃப்ரீஸ் டாஸ்க் நடைபெறும்.

அவ்வாறு இந்த பிக்பாஸ் 3-வது சீசனிலும் 80-வது நாளில் இருந்து ஃப்ரீஸ் டாஸ்க் நடைபெறுகிறது. இந்த ஃப்ரீஸ் டாஸ்க்கில் முதலாவதாக முகேனின் அம்மாவும் தங்கையும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தனர். அவர்களை தொடர்ந்து லாஸ்லியாவின் அப்பா, அம்மா மற்றும் தங்கைகள் வீட்டிற்குள் வந்தனர்.


அதனை தொடர்ந்து இந்த வாரம் தர்ஷனின் அம்மாவும் தங்கையும், வனிதாவின் மகள்களும் சேரனின் குடும்பத்தினரும், கவினின் நண்பர், சாண்டியின் மகள் லாலா, ஷெரினின் தாய் ஆகியோர் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்து அவர்களை சந்தித்து மகிழ்ச்சியாக உரையாடி சென்றனர்.

இன்று வெளியான புரோமோ வீடியோவில் கமல்ஹாசன் லாஸ்லியா தந்தை வீட்டிற்குள் வந்து சென்றது குறித்து கவினிடம் பேசுகிறார். அப்போது லாஸ்லியா அப்பா உங்களிடம் எந்தவித கோபத்தையும் வெளிப்படுத்தவில்லை, அவர் ஒரு சிறந்த மனிதன். அவர் வந்து போனது ஒரு த்ரில்லர் காட்சிகளை பார்த்தது போன்று இருந்தது.



Loading...

ஆனால் ஒரு அப்பாவாக நான் எப்படி செயல்பட்டிருப்பேனோ அதை விட அவர் சிறப்பாக செயல்பட்டார் என்று கவினுக்கு அவரை பற்றி எடுத்து கூறி கொண்டிருக்கிறார்.

Also Watch : பிகில் பாடலும் காப்பியா?

First published: September 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...