ஆரிரோ ஆரிரோ இது தந்தையின் தாலாட்டு... மகிழ்ச்சியில் நெகிழும் சாண்டி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் 82-வது நாளிற்கான இரண்டாவது புரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது.

Web Desk | news18
Updated: September 13, 2019, 1:05 PM IST
ஆரிரோ ஆரிரோ இது தந்தையின் தாலாட்டு... மகிழ்ச்சியில் நெகிழும் சாண்டி!
பிக்பாஸ் போட்டியாளர் சாண்டி அவரது மகள் லாலாவுடன்
Web Desk | news18
Updated: September 13, 2019, 1:05 PM IST
பிக்பாஸ் வீட்டில் இன்று ஃப்ரீஸ் டாஸ்க் மூலம் சாண்டியை கண்கலங்க வைத்தது நிகழ்ச்சி குழு.

100 நாட்களுக்கு ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 80 நாட்களை கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டுள்ளது. ஒவ்வொரு பிக்பாஸ் சீசனிலும் 75 நாட்களை கடந்த பிறகு வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு ஃப்ரீஸ் டாஸ்க் நடைபெறும்.

அவ்வாறு இந்த பிக்பாஸ் 3-வது சீசனிலும் 80-வது நாளில் இருந்து ஃப்ரீஸ் டாஸ்க் நடைபெறுகிறது. இந்த ஃப்ரீஸ் டாஸ்க்கில் முதலாவதாக முகேனின் அம்மாவும் தங்கையும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தனர்.அவர்களை தொடர்ந்து லாஸ்லியாவின் அப்பா, அம்மா மற்றும் தங்கைகள் வீட்டிற்குள் வந்தனர்.


Also read... பிக்பாஸில் ஃப்ரீஸ் டாஸ்க்கில் பளார் என அறைவாங்கிய கவின்! அடித்தது யார் தெரியுமா?

அதனை தொடர்ந்து 81-வது நாளில் தர்ஷனின் அம்மாவும் தங்கையும், வனிதாவின் மகள்களும் சேரனின் குடும்பத்தினரும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தனர்.

இதனை தொடர்ந்து இன்று 82-வது நாளிற்காக காலை வெளியிட்ட முதல் புரோமோவில் கவினின் நண்பர் பிக்பாஸ் வீட்டுற்குள் வந்திருந்த வீடியோ வெளியிடப்பட்டது.

Loading...

இந்நிலையில் நிகழ்ச்சி குழு தற்போது 2-வது புரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில், ஆரிரோ ஆரிரோ இது தந்தையின் தாலாட்டு... என்ற பாடல் ஒலிபரப்பப்பட்டு சாண்டியின் மகள் லாலா உள்ளே வருகிறார். அதனை தொடர்ந்து சாண்டியின் மனைவியும் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகிறார்.

தனது மகள் லாலாவைக் கண்ட சாண்டி மகிழ்ச்சியில் கண்ணீர் விடும் காட்சி மற்ற போட்டியாளர்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.

Also see...

First published: September 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...