பிக்பாஸில் மோஸ்ட் பாப்புலர் நான்தான்...! தனக்குத் தானே சர்டிபிகேட் கொடுத்த வனிதா

bigg boss tamil 3 | பிக்பாஸ் நிகழ்ச்சி குழு 68-வது நாளிற்கான இரண்டாவது புரோமோ வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளது.

பிக்பாஸில் மோஸ்ட் பாப்புலர் நான்தான்...! தனக்குத் தானே சர்டிபிகேட் கொடுத்த வனிதா
பிக்பாஸ் வீட்டில் வனிதா
  • News18
  • Last Updated: August 30, 2019, 1:22 PM IST
  • Share this:
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் மோஸ்ட் பாப்புலர் நான்தான் என்று வனிதா கூறியுள்ள வீடியோ வெளியாகியுள்ளது.

100 நாட்களுக்கு ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்ப்போது 67 நாட்களை கடந்து ஒளிபரப்பாகியுள்ளது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சி தற்போது 8 போட்டியாளர் மட்டுமே உள்ளனர்.

பிக்பாஸ் வீட்டில் கடந்த 4 நாட்களாக கிரமத்து கலைகளை போற்றும் வகையில் கலை நிகழ்ச்சிகளும், வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டு போட்டியும் வைக்கப்பட்டது.


Also read... கோலிவுட் - ஹாலிவுட்... இந்த வாரம் ரிலீஸ் ஆன படங்கள்...!

இதில், கைப்பாவை, கூத்து, வில்லுப்பாட்டு என பல கலைகளை வீட்டில் உள்ள ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் கற்றுக்கொண்டனர். இந்த டாஸ்கில் சிறப்பாக செயல்பட்டவர்களாக சேரன் மற்றும் முகேன் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்நிலையில் இன்று நிகழ்ச்சி குழு 68-வது நாளுக்கான இரண்டாவது புரோமோ வீடியோவை வெளியாகியுள்ளது. அதில் வீட்டில் உள்ள 8 பேரில் யார் மோஸ்ட் பாப்புலர் என்று 1 முதல் 8 எண்களை கொடுத்த பிக்பாஸ், வனிதாவிடம் வரிசைபடுத்த சொல்கிறார்.

Loading...அப்போது முதலாவது எண்ணை எடுத்த வனிதா நான் தான் இந்த பிக்பாஸ் வீட்டின் மோஸ்ட் பாப்புலர் என்று அவருக்கு அவரே கூறிக்கொள்கிறார். இரண்டாவதாக சேரனையும் மூன்றாவதாக லாஸ்லியாவையும் தேர்ந்தெடுக்கிறார்.

இதில் கடைசியாக 8-வது எண்ணை முகேனுக்கு வழங்கும் போது வனிதா இந்த வரிசை சண்டையில் பாப்புலர் ஆனவர்களாக கூட இருக்கலாம் என்று தெரிவிக்கிறார்.

Also see...

First published: August 30, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...