பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவதற்கான காரணத்தை சாண்டியிடம் கூறிய கவின்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 95-வது நாளிற்கான முதல் புரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது.

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவதற்கான காரணத்தை சாண்டியிடம் கூறிய கவின்!
கவின் மற்றும் சாண்டி
  • News18
  • Last Updated: September 26, 2019, 10:32 AM IST
  • Share this:
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவதற்கான காரணத்தை கவின் சாண்டியிடம் கூறும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. 100 நாட்கள் தொடந்து ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி தற்போது 95-வது நாளை எட்டியுள்ளது.

டிக்கட் டூ ஃபினாலே மூலம் நேரடியாக முகேன் இறுதி சுற்றிற்கு தேர்வான நிலையில் வீட்டில் உள்ள மற்ற ஹவுஸ்மேட்களிடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.


இந்நிலையில் நேற்று ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியில் பிக்பாஸ் முகேனை தவிர மற்ற 5 போட்டியாளர்களுக்கு ஒரு வாய்ப்பை அளிக்கிறார்.

அதாவது, போட்டியில் இறுதியில் வெற்றி பெறும் நபருக்கே ரூபாய் 50 லட்சம் வழங்கப்படும். அதற்கு முன்னர் ரூ.5 லட்சம் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைத்த பிக்பாஸ் யார் இத்தொகையைப் பெற்றுக் கொண்டு இப்போதே வெளியேறத் தயாராக இருக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்புகிறார்.

அதற்கு முதலாவதாக எழுந்த கவின் நான் இந்த தொகையை பெற்றுக்கொண்டு வீட்டை விட்டு வெளியேற தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்தார்.இந்நிலையில் 95-வது நாளிற்கான முதல் புரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. அதில், இன்னும் பத்து நாட்கள் தானே உள்ளது என்று சாண்டியிடம் கூறும் கவின் வீட்டை விட்டு வெளியேறும் முடிவை தான் முன்னதாக்வே எடுத்துவிட்டதாக கூறினார்.மேலும், இந்த வீட்டில் இவ்வளவையும் பன்னிட்டு கூச்சமே இல்லாம மேடையில வந்து என்னால நிக்க முடியாது என்றும் கவின் தெரிவித்துள்ளார்.

Also see...

First published: September 26, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading