பிக்பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்த முன்னாள் போட்டியாளர்கள்... மகிழ்ச்சியில் ஹவுஸ்மேட்ஸ்...!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் 93-வது நாளிற்கான முதல் புரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது.

பிக்பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்த முன்னாள் போட்டியாளர்கள்... மகிழ்ச்சியில் ஹவுஸ்மேட்ஸ்...!
பிக்பாஸ் 3
  • News18
  • Last Updated: September 24, 2019, 10:52 AM IST
  • Share this:
பிக்பாஸ் 2-வது சீசனின் கலந்து கொண்ட போட்டியாளர்களான யாஷிகா மற்றும் மகத் இன்று பிக்பாஸ் வீட்டுக்கு செல்கின்றனர்.

பிக்பாஸ் தமிழ் 3-வது சீசன் நிறைவடைய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் போட்டி கடுமையாக நடைபெற்று வருகின்றது.

14-வது வாரமான இந்த வாரம் வீட்டில் 6 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இதில் இறுதிச் சுற்றிற்கு நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டதால் அவரை தவிற வீட்டில் உள்ள மற்ற 5 போட்டியாளர்களும் எவிக்‌ஷனுக்காக நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


இந்நிலையில் பிக்பாஸ் வீட்டின் 93-வது நாளுக்கான முதல் புரோமோ வீடியோவை நிகழ்ச்சிக் குழு வெளியிட்டுள்ளது. அதில், பிக்பாஸ் சீசன் 2 போட்டியாளர்களான யாஷிகா மற்றும் மகத் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைகிறார்கள்.

அவர்களை கட்டி அணைத்து வரவேற்கிறார் சாண்டி. வீட்டில் உள்ள மற்ற ஹவுஸ்மேட்கள் அவர்களை வரவேற்று வீட்டிற்குள் அழைத்து செல்கிறார்கள்.

அப்போது பேசிய யாசிகா உங்க வீடு நல்லா இருக்குயா' என  கூற, டாஸ்க் எல்லாம் நல்லா விளையாடுங்க என மகத் போட்டியாளர்களுக்கு அட்வைஸ் செய்கிறார்.

Loading...

Also See...

நடிகை ரம்யா பாண்டியன் போட்டோஸ்...Also see...

First published: September 24, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...