ஷெரினை காப்பாற்ற தர்ஷன் செய்த அதிரடி செயல்... அதிர்ச்சியில் பார்வையாளர்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சி குழு 92-வது நாளிற்கான முதல் புரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது.

ஷெரினை காப்பாற்ற தர்ஷன் செய்த அதிரடி செயல்... அதிர்ச்சியில் பார்வையாளர்கள்!
தர்ஷன்
  • News18
  • Last Updated: September 23, 2019, 9:54 AM IST
  • Share this:
இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஷெரினையும், சாண்டியையும் காப்பாற்ற தர்ஷன் செய்த காரியத்தை பார்த்தை பார்வையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தொடர்ந்து 100 நாட்களுக்கு ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 90 நாட்களை கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் தற்போது ஷெரின், தர்ஷன், சாண்டி, கவின், லாஸ்லியா, முகேன் என 6 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.


கடந்த வாரம் டிக்கெட் டூ ஃபினாலேவிற்காக நடைபெற்ற டாஸ்குகளில் அதிக மதிப்பெண் பெற்று இறுதிச்சுற்றிற்கு முகேன் நேரடியா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கடந்த வாரம் நாமிமேட் செய்யப்பட்ட சேரன் குறைந்த வாக்குகளை பெற்றிருந்ததால் நேற்று எவிக்‌ஷன் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

நிகழ்ச்சி நிறைவடைய இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் போட்டியின் இறுதி சுற்றிற்கு செல்வதற்காக போட்டியாளர்கள் தீவிரமாக விளையாடி வருகின்றனர்.இந்நிலையில் இன்று 92-வது நாளிற்கான முதல் புரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. அதில், பிக்பாஸ் தர்ஷனிடம் இந்த வாரம் நீங்கள் இரண்டு நபரை காப்பாற்ற விரும்பினால் யாரை முதலில் காப்பாற்றுவீர்கள்? என்று கேட்டார்.அதற்கு பதிலளித்த தர்ஷன் முதலில் நான் ஷெரினை காப்பாற்றுவேன் என்று கூறினார். அப்படி ஷெரினை காப்பாற்ற நினைத்தால் ஒரு பச்சை மிளகாயை சாப்பிட வேண்டும் என்று பிக்பாஸ் கூற தர்ஷன் பச்சை மிளகாயை சாப்பிடுகிறார்.

இரண்டாவதாக ஒருவரை காப்பாற்ற நினைப்பவர் யார் என்று தர்ஷனிடம் பிக்பாஸ் கேட்க அதற்கு சாண்டி என்று தர்ஷன் தெரிவித்தார். அவரை காப்பாற்றவும் இன்னொரு பச்சை மிளகாயை சாப்பிட சொன்னார் பிக்பாஸ் அதற்கு தர்ஷன் பச்சை மிளகாயை சாப்பிட்டார். இதைப் பார்த்த பார்வையாளர்கள் தர்ஷனை பாராட்டி வருகின்றனர்.

Also see...

First published: September 23, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading