பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறப்போவது யார்? வெளியானது வீடியோ!

Bigg Boss Tamil 3 | பிக்பாஸ் நிகழ்ச்சியின் 85-வது நாளுக்கான முதல் புரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது நிகழ்ச்சிக் குழு

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறப்போவது யார்? வெளியானது வீடியோ!
பிக்பாஸ்
  • News18
  • Last Updated: September 16, 2019, 10:09 AM IST
  • Share this:
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதிச்சுற்றுக்கு நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் இந்த வாரம் நடைபெறுகிறது.

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 3-வது சீசன் கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. 100 நாட்களாக தொடர்ந்து ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி தற்போது 84 நாட்களை கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டுள்ளது.

கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி 16 போட்டியாளர்களுடன் தொடங்கியது. தற்போது 7 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.


பிக்பாஸ் நிகழ்ச்சியில் 3 வாரமே எவிக்‌ஷன் மூலம் வெளியேற்றப்பட்ட வனிதா விஜயகுமார் வைல்காட் மூலமாக மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தார்.

இந்நிலையில் நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து மீண்டும் எவிக்‌ஷன் மூலம் வனிதா விஜயகுமார் வெளியேற்றப்பட்டார்.

பிக்பாஸ் 3-வது சீசன் தற்போது இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளதால் போட்டியாளர்கள் அனைவரும் தீவிரமாக விளையாடத் தொடங்கியுள்ளனர்.

Loading...

இந்நிலையில் இன்று 85-வது நாளுக்கான முதல் புரோமோ வீடியோவை நிகழ்ச்சிக் குழு வெளியிட்டுள்ளது. அதில், இந்த வாரம் முழுவதும் நடைபெறும் டாஸ்கில் யார் சிறப்பாக விளையாடுகிறார்களோ அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதிச் சுற்றிக்கு நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நிகழ்ச்சியின் இறுதி சுற்றிற்கு முன்னேறுவதற்காக போட்டியாளர்கள் முனைப்புடன் விளையாடுகின்றனர். இந்த வார இறுதியில் யார் இந்த டாஸ்கில் வெற்றிபெற்றவர் என்பது தெரியவரும்.

Also see...

First published: September 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...