பிக்பாஸில் ஃப்ரீஸ் டாஸ்க்கில் பளார் என அறைவாங்கிய கவின்! அடித்தது யார் தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 82-வது நாளிற்கான முதல் புரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது.

news18
Updated: September 13, 2019, 11:40 AM IST
பிக்பாஸில் ஃப்ரீஸ் டாஸ்க்கில் பளார் என அறைவாங்கிய கவின்! அடித்தது யார் தெரியுமா?
பிக்பாஸ் போட்டியாளர் கவின்
news18
Updated: September 13, 2019, 11:40 AM IST
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஃப்ரீஸ் டாஸ்கில் இன்று கவின் பலார் என அறைவாங்கும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. 100 நாட்களுக்கு தொடர்ந்து ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி தற்போது 80 நாட்களை கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டுள்ளது.

16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சி தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். வைல்காட் மூலமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கஸ்தூரி அடுத்த இரண்டாவது வாரமே எவிக்‌ஷன் மூலமாக வெளியேற்றப்பட்டார். அவருக்கு ரகசிய அறை வாய்ப்பை பிக்பாஸ் வழங்கியும் அதனை ஏற்க மறுத்த கஸ்தூரி நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.


அதனை தொடந்து வெளியேறிய சேரன் ரகசிய அறையின் வாய்ப்பை பெற்றுகொண்டு மூன்று நாட்கள் அங்கு இருந்து மற்ற போட்டியாளர்களின் நடவடிக்கைகளை கவணித்து கொண்டிருந்தார்.

இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் ஃப்ரீஸ் டாஸ்க் நடைபெறுகிறது. இதில் கடந்த இரண்டு நாட்களாக முகேன், லாஸ்லியா, தர்ஷன், சேரன், வனிதா உள்ளிட்டோரின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தனர்.

இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சியின் முதல் புரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. அதில் இன்றைய ஃப்ரீஸ் டாஸ்கிற்காக கவினின் நண்பர் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார்.

Loading...அப்போது கவினின் நணபர் கவினிடம் நீ இவ்வளவு கேவலமாக ஆடின கேம்காகவும், மட்டமாக ஒரு விசயம் பன்னதுக்காகவும், உன்ன நம்புனவங்கள கைவிட்டதுக்காகவும், இங்க இருக்க மற்ற போட்டியாளர்களையும் ஹர்ட் பன்னதுக்கு நான் உன்ன அடிக்கிறன்.

இந்த கேம்ல டைட்டில் வின் பன்னிட்டனா என்ன நீ எல்லாரு முன்னாடியும் அடிச்சுக்கோ என்று கூறி கவினை பளார் என கண்ணத்தில் அறைந்தார் அவரது நண்பர். இதனை பார்த்த மற்ற போட்டியாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Also see...

First published: September 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...