போட்டியாளரின் அம்மாவுக்கு பிறந்தநாள் கொண்டாடிய பிக்பாஸ்... நெகிழ்ச்சியில் ஹவுஸ்மெட்ஸ்!

Bigg Boss Tamil 3 |பிக்பாஸ் நிகழ்ச்சியின் 81-வது நாளிற்கான முதல் புரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது.

news18
Updated: September 12, 2019, 10:44 AM IST
போட்டியாளரின் அம்மாவுக்கு பிறந்தநாள் கொண்டாடிய பிக்பாஸ்... நெகிழ்ச்சியில் ஹவுஸ்மெட்ஸ்!
பிக்பாஸ் வீடு
news18
Updated: September 12, 2019, 10:44 AM IST
போட்டியாளரின் அம்மாவிற்கு பிக்பாஸ் பிறந்த நாள் கொண்டாடியதை கண்ட மற்ற போட்டியாளர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.

100 நாட்களுக்கு ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 80 நாட்களுக்கு கடந்து ஒளிபரப்பாகின்றது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிகிழ்ச்சியில் தற்போது சேரன், வனிதா, ஷெரின், லாஸ்லியா, சாண்டி, தர்ஷன், முகேன், கவின் என் எட்டு போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.

இந்நிலையில் கடந்த வார எவிக்‌ஷன் மூலம் வெளியேற்றப்பட்ட சேரன் ரகசிய அறையில் தங்கவைக்கப்பட்டார். தொடர்ந்து 2 நாட்களுக்கு வீட்டில் உள்ள மற்ற போட்டியாளர்களின் நடவடிக்கைகளை கவனித்த சேரன் நேற்று மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தார்.


Also see... பிக்பாஸ் தர்ஷனின் ஹேன்ட்சம் ஸ்டில்ஸ்!

பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு இந்த வாரம் ஃப்ரீஸ் டாஸ்க் நடைபெற்று வருகின்றது, அதில் கடந்த இரண்டு நாட்களாக முகேன் குடும்பத்தினரும் லாஸ்லியாவின் குடும்பத்தினரும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று 81-வது நாளிற்கான முதல் புரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. அதில், இன்றைய ஃப்ரீஸ் டாஸ்க்கில் தர்ஷனின் அம்மா மற்றும் தங்கை பிக்பாஸ் வீட்டிற்குள் வருகின்றனர்.

Loading...அவர்களை கண்டு மற்ற போட்டியாளர்களும் மகிழ்ச்சியடைந்தனர். இந்நிலையில் தர்ஷனின் அம்மாவின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் பிக்பாஸ் வீட்டிற்குள் அவர்களுக்கு கேக் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அப்போது சாண்டி தர்ஷனின் அம்மாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டு அவருக்கு கேக் வெட்டி கொண்டாடுகின்றனர். இதனை கண்ட மற்ற ஹவுஸ்மெட்ஸ் அனைவரும் நெகிழ்ச்சியடைந்தனர்.

Also see...

First published: September 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...