ஃப்ரீஸ் டாஸ்க்கில் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த பிரபலம்... உற்சாகத்தில் போட்டியாளர்கள்!

bigg boss tamil 3 | பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 80-வது நாளிற்கான முதல் புரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது.

news18
Updated: September 11, 2019, 10:16 AM IST
ஃப்ரீஸ் டாஸ்க்கில் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த பிரபலம்... உற்சாகத்தில் போட்டியாளர்கள்!
பிக்பாஸ் இல்லம்
news18
Updated: September 11, 2019, 10:16 AM IST
பிக்பாஸ் வீட்டில் இன்று ஃப்ரீஸ் டாஸ்கின் மூலம் வீட்டிற்குள் வந்த பிரபலத்தை கண்டு போட்டியாளர்கள் கொண்டாட்டத்தின் உச்சத்திற்கு சென்றனர்.

100 நாட்களுக்கு தொடர்ந்து ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசன் கடந்த ஜூன் மாதம் தொடங்கியது.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.


வைல்காட் மூலமாக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த நடிகை கஸ்தூரி வெளியேறும்போது அவருக்கு பிக்பாஸ் ரகசிய அறையில் இருந்து போட்டியை தொடர வாய்ப்பு அளித்தார்.

அதனை ஏற்க மறுத்த கஸ்தூரி நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். அவரைத் தொடர்ந்து அடுத்ததாக சேரன் எவிக்‌ஷனில் வெளியேறிய போது அவருக்கும் பிக்பாஸ் ரகசிய அறையில் தங்கி போட்டியை தொடர வாய்ப்பு அளித்தார்.

அதனை ஏற்ற சேரன் கடந்த 3 நாட்களாக ரகசிய அறையில் இருந்து வீட்டில் உள்ள மற்ற 7 போட்டியாளர்களை நடவடிக்கைகளை கவனித்து கொண்டிருந்தார்.

Loading...

இந்நிலையில் இன்று 80-வது நாளிற்கான முதல் புரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. அதில் வீட்டில் உள்ள அனைவரையும் ஃப்ரீஸ் என்று சொல்லிய பிக்பாஸ் சேரனை மீண்டும் இன்று பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்புகிறார்.



சேரனை பார்த்த போட்டியாளர்கள் மகிழ்ச்சியில் அவரை கட்டித்தழுவி கொண்டாடுகின்றனர். சேரனிடம் பேசிய வனிதா எல்லாறும் பேசுறத ஒட்டுக்கேட்டுட்டு வரீங்களா என்றும் அவரிடம் கேலியாக பேசுகிறார்.

Also see...

First published: September 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...