பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி... இன்று ஃப்ரீஸ் டாஸ்க்!

BiggBoss Tamil 3 |பிக்பாஸ் நிகழ்ச்சியின் 79-வது நாளிற்கான முதல் புரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது.

news18
Updated: September 10, 2019, 10:03 AM IST
பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி... இன்று ஃப்ரீஸ் டாஸ்க்!
முகேன் மற்றும் அவரது தாய்
news18
Updated: September 10, 2019, 10:03 AM IST
பிக்பாஸ் நிகழ்ச்சியில் 79-வது நாளான இன்று முதல் போட்டியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ஃப்ரீஸ் டாஸ்க் நடைபெறுகிறது.

கமல் ஹாசன் தொகுத்து வழக்கும் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 3-வது சீசன் கடந்த ஜூன் மாதம் தொடங்கியது.

16-போட்டியாளர்களுடன் தொடங்கிய நிகழ்ச்சி தற்போது எட்டு போட்டியாளர்களுடன் ஒளிபரப்பாகிக் கொண்டுள்ளது. கடந்த வாரம் வெளியேற்றப்பட்ட சேரன் ரகசிய அறையில் இருக்கும் நிலையில் இன்று பிக்பாஸ் இல்லத்தில் ஃப்ரீஸ் டாஸ்க் நடைபெறுகிறது.


பிக்பாஸ் நிகழ்ச்சியை பொருத்த வரையில் 100 நாட்களுக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் 75 நாட்களை கடந்த பிறகு வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு ஃப்ரீஸ் டாஸ்க் நடைபெறும்.

Also see... நடிகை சனம் ஷெட்டி க்யூட் கிளிக்ஸ்!

பிக்பாஸ் ஃப்ரீஸ் சொன்னவுடன் வீட்டில் உள்ள அனைவரும் அப்படியே நின்றுவிட வேண்டும். அப்போது பிக்பாஸ் போட்டியாளர் யாருடைய வீட்டில் இருந்தாவது அவர்களது உறவினர்கள் வருவார்கள்.

Loading...

அவ்வாறு இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியின் 79-வது நாளுக்கான முதல் புரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. அதில், ஃப்ரீஸ் டாஸ்க்கில் முதலாவதாக முகேனின் தாய் மற்றும் அவரது தங்கையும் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகிறார்கள்.அவர்களின் வருகையை கண்டு பிக்பாஸ் வீட்டில் உள்ள மற்ற போட்டியாளர்கள் நெகிழ்ச்சியடைகின்றனர்.

Also see...

First published: September 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...