பிக்பாஸ் வீட்டின் இந்த வார தலைவர் போட்டியில் மூவர்..! இருவர் விலகியதால் தலைவரான ஒருவர்...?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் 78-வது நாளிற்கான முதல் புரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது.

பிக்பாஸ் வீட்டின் இந்த வார தலைவர் போட்டியில் மூவர்..! இருவர் விலகியதால் தலைவரான ஒருவர்...?
தர்ஷன் மற்றும் லாஸ்லியா
  • News18
  • Last Updated: September 9, 2019, 10:17 AM IST
  • Share this:
பிக்பாஸ் வீட்டில் இந்த வார தலைவருக்கான போட்டியில் வனிதா, லாஸ்லியா மற்றும் தர்ஷன் போட்டியிடும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 3-வது சீசன் கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. 100 நாட்களுக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி தற்போது 77 நாட்களை கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டுள்ளது.

16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். வைல்காட் மூலமாக பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு 17-வது போட்டியாளராக வந்த கஸ்தூரி வந்த வேகத்திலேயே வெளியேற்றப்பட்டார்.


வெளியே வந்த அவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி குழு ரகசிய அறைக்கு செல்லும் வாய்ப்பை அளித்தது. அதனை ஏற்க மறுத்த கஸ்தூரி தொடர்ந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.

அதனை தொடர்ந்து கடந்த வாரம் எந்த போட்டியாளர்களையும் வெளியேற்றாததால் தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு 8 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டில் இருந்தனர்.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற எவிக்‌ஷனில் சேரன் குறைந்த வாக்குகளை பெற்றதால் அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

Loading...

வெளியில் வந்த அவருக்கு பிக்பாஸ் ரகசிய அறையில் இருப்பதற்கு வாய்ப்பை அளித்தது. அதனை ஏற்ற சேரன் தற்போது ரகசிய அறையில் இருந்து வீட்டில் உள்ள மற்ற 7 போட்டியாளர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை பார்த்துக்கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், 78-வது நாளிற்கான முதல் புரோமோ வீடியோவை பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. அதில் இந்த வார தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான போட்டி நடைபெற்றது.அதில் வனிதா, லாஸ்லியா மற்றும் தர்ஷன் மூவரும் கலந்து கொண்டனர். முதலாவதாக தன்னால் இந்த போட்டியை தொடர முடியாது என கூறிய வனிதா போட்டியில் இருந்து விலகினார்.

அவரை தொடர்ந்து தர்ஷனும் போட்டியில் இருந்து பாதியில்  வெளியேறியதால் மூன்றாவதாக இருந்தா லாஸ்லியா தான் இந்த வார தலைவராக ஆகிறார்.

ஆனால், இந்த வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியாது என தர்ஷனிடம் லாஸ்லியா கூறுகின்றார்.

Also see...

First published: September 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...
Listen to the latest songs, only on JioSaavn.com