”என்னப் பத்தி பேச உனக்கு எந்த உரிமையும் இல்ல...” வனிதாவை வெளுத்து வாங்கும் ஷெரின்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 74-வது நாளிற்கான முதல் புரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது.

news18
Updated: September 5, 2019, 10:34 AM IST
”என்னப் பத்தி பேச உனக்கு எந்த உரிமையும் இல்ல...” வனிதாவை வெளுத்து வாங்கும் ஷெரின்!
வனிதாவிடம் சண்டையிடும் ஷெரின்
news18
Updated: September 5, 2019, 10:34 AM IST
பிக்பாஸ் இல்லத்தில் இன்று வனிதாவிடம் ஷெரின் கடும் வாக்குவாதம் செய்யும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

100 நாட்களுக்கு தொடர்ந்து ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசன் கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. 16-போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பிக்பாஸ் வீட்டிற்கு விருந்தினர்களாக ஏற்கனவே வெளியேற்றப்பட்ட அபிராமி, மோகன் வைத்யா, சாக்‌ஷி அகர்வால் உள்ளிட்டோர் மீண்டும் வீட்டிற்குள் வந்துள்ளனர்.


Also see... பிக்பாஸ் 3: துள்ளுவதோ இளமை ஷெரினின் கியூட் ஸ்டில்ஸ்!

இதனால் கவின், ஷாக்சி மற்றும் லாஸ்லியா இடையே சண்டை களைகட்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

இந்நிலையில் இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியின் 74-வது நாளுக்கான முதல் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

Loading...அதில், வனிதா, ஷாக்சியிடம் ஷெரின் மற்றும் தர்ஷனின் நட்பு குறித்து தவறாக பேசுகிறார். இதனால் கோபமடைந்த ஷெரின் ”எவ்வளவு தைரியம் இருந்தால் நீ என்னுடைய நட்பு குறித்தும் என்னை குறித்தும் தவறாக பேசுவ” என்று வனிதாவிடம் சண்டையிடுகிறார்.

தொடர்ந்து பேசிய ”ஷெரின் என்னை பற்றியும் எனக்கும் தர்ஷனுக்கும் இடையே உள்ள நட்பு குறித்தும் பேசுவதற்கு உரிமை இல்லை” என்று வனிதாவிடம் கூறுகிறார்.

Also see...

First published: September 5, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...