பிக்பாஸிடம் மொக்கை வாங்கிய லாஸ்லியா...!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் 68-வது நாளிற்கான மூன்றாவது புரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது.

பிக்பாஸிடம் மொக்கை வாங்கிய லாஸ்லியா...!
லாஸ்லியா
  • News18
  • Last Updated: August 30, 2019, 4:11 PM IST
  • Share this:
பிக்பாஸிடம் லாஸ்லியா மொக்கை வாங்கும் வீடியோவை நிகழ்ச்சிக் குழு தற்போது வெளியிட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதத்தில் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி 67 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரி கொடுத்தார் கஸ்தூரி. ஆனால் வந்த வேகத்தில் வெளியேறியுள்ளார்.

தற்போது 8 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களாக உள்ளனர். இவர்களில் யாரும் இந்த வாரம் வெளியேற்றப்படப் போவதில்லை என்பதை முன்னரே பார்வையாளர்களிடம் கமல்ஹாசன் அறிவித்தார். ஆனால் இது வீட்டிலிருக்கும் போட்டியாளர்களுக்கு தெரியாது.


இந்நிலையில் போட்டியி ல் தங்களை தக்கவைத்து கொள்வதற்காக பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைத்து ஹவுஸ்மேட்ஸும் தீவிரமாக விளையாடி வருகின்றனர்.

Also read... பண மோசடியில் தாய்க்கு சிறை... பிக்பாசில் இருந்து வெளியேறினாரா கவின்...?

இந்நிலையில் 68-வது நாளிற்கான 3-வது புரோமோ வீடியோவை பிக்பாஸ் நிகழ்ச்சிகுழு வெளியிட்டுள்ளது. அதில், லாஸ்லியா வீட்டில் உள்ள மற்ற ஹவுஸ்மெட்களிடம் பிக்பாஸ் வீட்டின் விதிமுறைகளை முறையாக செய்ய வேண்டும் என்று கூறுகிறார்.

Loading...

மேலும், இந்த வீட்டில் சரியாக விதிமுறைகளை கடைபிடிப்பது நான் தான் என்று லாஸ்லியா கூறிகிறார். அபோது வீட்டில் பிக்பாசின் குரல் கேட்கிறது. லாஸ்லியாவை அழைத்த பிக்பாஸ் உங்களது மைக்கை சரியாக மாட்டுங்கள் என்று கலாய்க்கிறார்.இதனை கேட்ட மற்ற ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் லாஸ்லியாவை கேலி செய்து சிரிக்கின்றனர்.

Also see...

First published: August 30, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...