வனிதாவுக்கு பதிலடி கொடுத்த கமல்... விழுந்து விழுந்து சிரித்த தர்ஷன்...!

வனிதாவுக்கு பதிலடி கொடுத்த கமல்... விழுந்து விழுந்து சிரித்த தர்ஷன்...!
பிக்பாஸ்
  • Share this:
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வனிதாவின் கேள்விக்கு கமல்ஹாசன் சரியான பதிலடி கொடுக்க அதற்கு தர்ஷன் வாய்விட்டு சிரிக்கும் புரோமா தற்போது வெளியாகி உள்ளது.

பிக்பாஸ் வீட்டில் இருந்து வனிதாவை வெளியேற்றியதால்தான் நிகழ்ச்சி விறுவிறுப்பாக இல்லை என்று நெட்டிசன்களின் விமர்சனங்களாலேயே வனிதா மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்கு வந்தாக தகவல்கள் வெளியானது.

வனிதா வைல்கார்ட் மூலம் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் என்ட்ரி கொடுத்த பிறகு நிகழ்ச்சியில் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சென்றுகொண்டிருக்கிறது.


கடந்த இரண்டு வாரங்களாக வனிதா மற்றவர்களிடம் சண்டையிட்டு கொண்டு ஷெரின் மற்றும் சேரனிடம் நட்பாக பேசிக்கொண்டிருந்தார்.

ஆனால் கடந்த 3 நாட்களாக வனிதா ஷெரின் மற்றும் தர்ஷனின் நட்பு குறித்து தவறாக பேசி வருவதால் ஷெரின் வனிதாவிடம் தொடர்ந்து தனது எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று நான் பேசுவதை கட் செய்து கட் செய்து காட்டுகின்றனர் என்று கமல்ஹாசனிடம் கூறுகிறார். அதற்கு கிரிக்கெட் போட்டியின் ஹைலைட்ஸ் ஒளிபரப்பு செய்தால் அதில் நேரம் குறையுமே தவிர ஸ்கோர் என்றும் குறையாது என்று பதிலடி கொடுக்கிறார். பிறகு இதுகுறித்து தர்ஷனிடம் கேட்க ”உங்கள தான் சார் ரொம்ப பிடிக்கும்” என்று விழுந்து விழுந்து சிரிக்கிறார்.

Loading...

First published: September 7, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...