நீ என் பொண்ணுக்கு ரொம்ப டார்ச்சர் கொடுக்குற..! - ஷெரின் அம்மா

நீ என் பொண்ணுக்கு ரொம்ப டார்ச்சர் கொடுக்குற..!  - ஷெரின் அம்மா
ஷெரின் தாய்
  • News18 Tamil
  • Last Updated: September 13, 2019, 4:35 PM IST
  • Share this:
பிக்பாஸ் வீட்டில் இன்று ஃப்ரீஸ் டாஸ்க் மூலம் ஷெரினின் அம்மா உள்ளே வந்த புரோமோவை வெளியிட்டு உள்ளனர்.

100 நாட்களுக்கு ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 80 நாட்களை கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டுள்ளது. ஒவ்வொரு பிக்பாஸ் சீசனிலும் 75 நாட்களை கடந்த பிறகு வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு ஃப்ரீஸ் டாஸ்க் நடைபெறும்.

அவ்வாறு இந்த பிக்பாஸ் 3-வது சீசனிலும் 80-வது நாளில் இருந்து ஃப்ரீஸ் டாஸ்க் நடைபெறுகிறது. இந்த ஃப்ரீஸ் டாஸ்க்கில் முதலாவதாக முகேனின் அம்மாவும் தங்கையும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தனர். அவர்களை தொடர்ந்து லாஸ்லியாவின் அப்பா, அம்மா மற்றும் தங்கைகள் வீட்டிற்குள் வந்தனர்.


அதனை தொடர்ந்து 81-வது நாளில் தர்ஷனின் அம்மாவும் தங்கையும், வனிதாவின் மகள்களும் சேரனின் குடும்பத்தினரும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தனர்.

இதனை தொடர்ந்து இன்று 82-வது நாளிற்காக காலை வெளியிட்ட முதல் புரோமோவில் கவினின் நண்பர் பிக்பாஸ் வீட்டுற்குள் வந்திருந்த வீடியோவும், சாண்டியின் மகள் லாலா உள்ளே வரும் வீடியோவும் வெளியானது.Loading...

அதை தொடர்ந்து தற்போது ஷெரினின் தாய் உள்ளே வரும் வீடியோ வெளியாகி உள்ளது. அதில் ஷெரின் பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைவரோடும் ஜாலியாக பேசினார். லாஸ்லியாவை பார்த்து சந்தோஷமாக இரு என்று ஆறுதல் கூறினார்.

சாண்டியிடம் நீ தான் என் பொண்ணுக்கு ரொம்ப டார்ச்சர் கொடுக்குற என்று செல்லமாக கூற பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் சிரிப்பில் முழ்கினார்.Also Watch

First published: September 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...