நீ கெட்டவன் கிடையாது... நல்லவன்...! கவினை புகழும் சேரன்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் 60-வது நாளிற்கான முதல் புரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது.

news18
Updated: August 22, 2019, 10:26 AM IST
நீ கெட்டவன் கிடையாது... நல்லவன்...! கவினை புகழும் சேரன்
கவின் மற்றும் சேரன்
news18
Updated: August 22, 2019, 10:26 AM IST
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று கவினை சேரன் புகழ்ந்து பேசும் வீடியோ வெளியாகியுள்ளது.

100 நாட்கள் தொடர்ந்து ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சி தற்போது 60 நாட்களை எட்டியுள்ளது. கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி கடந்த ஜூன் மாதம் 16 போடியாளர்களுடன் தொடங்கியது.

Also read... பிக்பாஸ் மதுமிதா மீது காவல் நிலையத்தில் விஜய் டிவி புகார்!


இரண்டாவது வார இறுதியில் முதலாவது நபராக பாத்திமா பாபு வெளியேற்றப்பட்டார். அவரைத் தொடர்ந்து வனிதா விஜயகுமார், மோகன் வைத்யா, ரேஷ்மா, சரவணன், ஷாக்சி அகர்வால், மதுமிதா மற்றும் அபிராமி உள்ளிட்டோர் வெளியேற்றப்பட்டனர்.

இந்நிகழ்ச்சியில் வைல்காட் போட்டியாளராக நடிகை கஸ்தூரி இரண்டு வாரங்களுக்கு முன் பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்தார். மேலும் எவிக்‌ஷன் மூலம் மூன்றாவது வாரம் வெளியேற்றப்பட்ட வனிதா விஜயகுமாரும் கடந்த வாரம் வைல்காட் மூலம் மீண்டும் பிக்பாஸ் இல்லத்திற்குள் வந்தார்.

Also read... EXCLUSIVE: நான் பணம் கேட்டு மிரட்டினேனா?: விஜய் டிவி புகார் குறித்து மதுமிதா விளக்கம்!

Loading...

தற்போது ஒன்பது போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ள நிலையில் பரபரப்புக்கு பஞ்சமில்லாமலேயே உள்ளது.

இந்நிலையில் 60-வது நாளுக்கான இன்றைய முதல் புரோமோ வீடியோவை நிகழ்ச்சிக் குழு வெளியிட்டுள்ளது. அதில் கவினை புகழ்ந்து சேரனும் லாஸ்லியாவும் பேசுவது போன்று உள்ளது.



சேரன் கவினிடம் பேசுகையில் “நீ நண்பர்களுக்கு கொடுக்கின்ற முக்கியத்துவம் ரொம்ப நல்ல விஷயம், உன்னிடம் தெரியாம சில தவறுகள் வருகிறது. அதனால், நீ கெட்டவன் கிடையாது நல்லவன்” என்றும் அவர் பாராட்டியுள்ளார்.

Also see...

First published: August 22, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...