இவ்வளவு நாள் வேற்று கிரகத்தில் இருந்தீங்களா... மதுவிடம் கோபப்பட்ட லாஸ்லியா!

பிக்பாஸ் நிகழ்ச்சிகுழு 54-வது நாளான இன்று முதல் புரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது.

இவ்வளவு நாள் வேற்று கிரகத்தில் இருந்தீங்களா... மதுவிடம் கோபப்பட்ட லாஸ்லியா!
மதுமிதா மற்றும் லாஸ்லியா
  • News18
  • Last Updated: August 16, 2019, 10:31 AM IST
  • Share this:
இவ்வளவு நாள் வேற்று கிரகத்திலா இருந்தீங்க என்று மதுமிதாவிடம் லாஸ்லியா கோபப்படும் வீடியோ வெளியாகியுள்ளது.

100 நாட்கள் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த வாரத்தில் கஸ்தூரி வைல்ட் கார்டு என்ட்ரி கொடுத்ததை அடுத்து, நடிகை சாக்‌ஷி அகர்வால் வெளியேற்றப்பட்டார்.

கஸ்தூரியை பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பிய பிறகும் நிகழ்ச்சி விறுவிறுப்பாகததைத் தொடர்ந்து இந்த வாரம் வீட்டில் உள்ளவர்களுக்கு ஒரு டாஸ்க் வழங்கப்பட்டது.


அந்த டாஸ்கின் மூலம் பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் நுழைந்தார் வனிதா விஜயகுமார். அதனை அடுத்து மதுமிதாவை பகடைக்காயாக பயன்படுத்திக் கொண்ட வனிதா, பிக்பாஸ் வீட்டில் உள்ள ஆண்கள் பெண்களை அடிமைப்படுத்துவதாகவும், பயன்படுத்திக் கொள்வதாகவும் கூறி மதுமிதாவைத் தூண்டி விட்டார்.

இதனால் நேற்று முந்தினம் முதல் சேரனை தவிற வீட்டில் உள்ள மற்ற ஆண்களிடம் மதுமிதா நேரடியா சண்டையிட தொடங்கினார்.

இந்த சண்டை கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து இன்றும் நடைபெற்று வருகிறது.

அதனை வெளிபடுத்தும் விதமாக நிகழ்ச்சிக்குழு இன்று ஒரு புரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் லாஸ்லியா மதுமிதாவிடம் இவ்வளவு நாள் வேற்று கிரகத்திலா இருந்தீங்க, ஆண்கள் குறித்து இந்த கேள்விகள் ஏன் முன்னரே தோன்றவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Also see...

First published: August 16, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்