பிக்பாஸ் இல்லத்தில் தொடரும் ஆண், பெண் பிரச்னை! கஸ்தூரியின் பேச்சால் கடுப்பான கவின்

பிக்பாஸ் நிகழ்ச்சி குழு, 54-வது நாளுக்கான இரண்டாவது புரோமோ வீடியோவை இன்று வெளியிட்டுள்ளது.

பிக்பாஸ் இல்லத்தில் தொடரும் ஆண், பெண் பிரச்னை! கஸ்தூரியின் பேச்சால் கடுப்பான கவின்
கவின் மற்றும் கஸ்தூரி
  • News18
  • Last Updated: August 16, 2019, 1:09 PM IST
  • Share this:
பிக்பாஸ் இல்லத்தில்  3-வது நாளாக ஆண், பெண் பாலின பிரச்னைத் தொடர்ந்து வருவதால் வீட்டில் உள்ளவர்களிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

100 நாட்கள் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி 53 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் கஸ்தூரி வைல்ட் கார்டு என்ட்ரி கொடுத்தார்.

மேலும், பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் நடப்பது வழக்கம். இந்தமுறை இந்த டாஸ்க்குக்காக பிக்பாஸ் வீடு ஹோட்டலாக மாறியுள்ளது. விருந்தாளியாக என்ட்ரி கொடுத்துள்ளார் வனிதா விஜயகுமார்.


பிக்பாஸ் வீட்டில் வனிதாவின் வருகை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டாவது நபராக வெளியேறிய வனிதா, நிகழ்ச்சியை வெளியிலிருந்து பார்த்துவிட்டு வந்திருப்பதால் போட்டியாளர்களைத் தனது கேள்விகளால் துளைத்தெடுத்தார்.

Also read... அம்பேத்கர் படம் வரைந்து உலக சாதனை படைத்த திருநங்கைகள்! உறுதுணையாக நின்ற விஜய் சேதுபதி!

அதனை அடுத்து மதுமிதாவை பகடைக்காயாக பயன்படுத்திக் கொண்ட வனிதா, பிக்பாஸ் வீட்டில் உள்ள ஆண்கள் பெண்களை அடிமைப்படுத்துவதாகவும், பயன்படுத்திக் கொள்வதாகவும் கூறி மதுமிதாவைத் தூண்டி விட்டார்.இதனால் மதுமிதா பிக்பாஸ் வீட்டில் உள்ள ஆண்களிடம் நேரடியாக சண்டையிட்டார். அப்போது வீட்டில் உள்ள ஆண்கள் அனைவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் நிலைத்திருக்க வேண்டி பெண்களை பயன்படுத்திக்கொள்வதாகவும் பெண்களை அடிமைப்படுத்துவதாகவும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து சேரனை தவிர சாண்டி, கவின், முகின், தர்ஷன், மற்றும் லாஸ்லியா உள்ளிட்டோர் மதுவிற்கு எதிராக ஒரு அணியாக குரல் கொடுத்து வந்தனர்.

Also read... இவ்வளவு நாள் வேற்று கிரகத்தில் இருந்தீங்களா... மதுவிடம் கோபப்பட்ட லாஸ்லியா!

இந்த சண்டை கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்துவந்த நிலையில் இன்று பிக்பாஸ் நிகழ்ச்சி குழு 54-வது நாளுக்கான இரண்டாவது புரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது.

அதில் சாண்டி உள்ளிட்ட ஆண்களிடம் கஸ்தூரி பேச வருவது போன்றும் அவர்களிடம் பேச விடாமல் கவின் தடுப்பது போன்றும் உள்ளது.இதனால் கோபமடைந்த கஸ்தூரி கவினின் சர்ச்சை விசயமான நான்கு பெண் காதலை பற்றி கூற அவரிடம் கவின் கோபப்படுவது போன்று வீடியோ வெளியாகியுள்ளது.

Also see...

First published: August 16, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்