ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

டேய் வேலைய பாருடா போடா... விக்ரமனை ஒருமையில் பேசிய அசீம் - வெளியானது வீடியோ!

டேய் வேலைய பாருடா போடா... விக்ரமனை ஒருமையில் பேசிய அசீம் - வெளியானது வீடியோ!

பிக்பாஸ்

பிக்பாஸ்

அசீம் முதலில் ஆயிஷாவிடம் வாடி, போடி என்று ஒருமையில் பேசிய வீடியோ வெளியான நிலையில் தற்போது விக்ரமனை வாடா, போடா என்று ஒருமையில் பேசும் வீடியோ வெளியாகியுள்ளது.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் கடந்த 9-ம் தேதி தொடங்கியுள்ளது. இந்நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, அசல் கோலார், ஷிவின் கணேசன், முகமது அசீம், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, ஷெரீனா, மணிகண்ட ராஜேஷ், ரக்ஷிதா மகாலட்சுமி, ராம் ராமசாமி, ஆர்யன் தினேஷ் கனகரத்தினம், ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மகேஸ்வரி சாணக்கியன், வி.ஜே.கதிரவன், குயின்சி ஸ்டான்லி, நிவா,தனலட்சுமி என 20 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

பிக்பாஸில் பொதுவாக 40 நாட்களை கடந்து வரும் சண்டைகள் அனைத்தும் இந்த சீசனின் முதல் இரண்டு நாட்களிலேயே தொடங்கிவிட்டது. இதற்கு சனிகிழமை நடந்த எபிசோடில் கமல் வாழ்த்துகளையும் தெரிவித்தார். மேலும் 20 போட்டியாளர்கள் ஏற்கெனவே உள்ள நிலையில்நேற்று மைனா நந்தினி வைல்ட்கார்ட் எண்ட்ரியாக 21-வது நபராக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார்.

மேலும் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டின் கேப்டனாக ஜிபி முத்து தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த வார எலிமினேஷன் லிஸ்டில் ஆயிஷா, அசீம், தனலட்சுமி, மகேஸ்வரி, நிவா, குயின்சி, ரச்சிதா, ராம், சாந்தி, ஷெரினா, ஷிவின், விக்ரமன் ஆகியோர் உள்ளனர்.

இந்நிலையில் 12-வது நாளிற்கான முதல் ப்ரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு முன்னதாக வெளியிட்டது. அதில் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் 1 முதல் 13 வரை தங்களை ரேங்கிங் செய்துகொள்ள பிக்பாஸ் கூறினார்.

அப்போது வந்து பேசிய அசீம், தகுதி இல்லாத பலபேர் இங்க இருக்காங்கனு சொல்ல அப்போது ஆயிஷா தகுதி இல்லனு எந்த பேஸ்ல சொன்னீங்கனு கேக்க நீ தூக்கத்த தவிற என்ன பன்னுனனு அசீம் கேட்க நீங்க தூங்கவே இல்லையானு ஆயிஷா திரும்ப கேட்க வாக்குவாதம் முற்றியாது.

அப்போது கத்தி பேசாத என்கிட்டனு ஆயிஷாவை பார்த்து அசீம் கூற நீங்க என்ன பத்தி பேசுனா அப்படிதான் பேசுவேனு ஆயிஷா சொல்ல அவரை பார்த்து அசீம் வாடி போடி என்று பேச பிக்பாஸ் வீடே கலேபரமாக காட்சியளிக்கும் முதல் ப்ரோமோ வீடியோ முன்னதாக வெளியானது.

Also read... விஜய்க்கு கதை சொல்லிருக்கேன்... எதிர்காலத்தில் அவருடைய படத்த இயக்க வாய்ப்பு உள்ளது - சீக்ரெட்டை உடைத்த பிரதீப்!

இந்நிலையில் தற்போது இரண்டாவது ப்ரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. அதில் அசீம் 6-வதாக இருக்கும் விக்ரமனின் இடத்தை தான் எடுத்துக்கொள்வதாக கூறினார். அதற்கு காரணம் விக்ரம் எப்பவும் தூங்கிட்டு இருக்காரு அதுக்கு அவரு ஜெயில்ல போய் தூங்கட்டும்னு சொல்ல நீங்க என்ன வேலை பன்றீங்கனு விக்ரம் பதில் கேள்வி எழுப்பினார்.

அதனை தொடர்ந்து அசீம் விக்ரமனை பார்த்து யோவ் நீதான்ய தூங்கிட்டு இருக்கனு சொல்ல யோவ்னுலாம் சொல்லாதீங்கனு அசீம் கூறினார். அதனை தொடர்ந்து டேய் வேலைய பாருடா போடா என்றும், தெரியாமதான் கேக்குறன் வெள்ளை சட்ட போட்டா அரசியல்வாதினா எனக்கு புரியலடா என்று தொடர்ந்து ஒருமையிலேயே விக்ரமனை நோக்கி அசீம் பேசுகிறார்.

அப்போது மற்ற போட்டியாளர்கள் தடுக்க முயன்ற போது அசீம் தொடர்ந்து விக்ரமனின் சண்டையிடும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Bigg Boss Tamil 6