ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

நீயும் பொம்மை.. நானும் பொம்மை டாஸ்கிலிருந்து வெளியேற்றப்பட்ட அசீம், விக்ரமன் - காரணம் இதுதான்!

நீயும் பொம்மை.. நானும் பொம்மை டாஸ்கிலிருந்து வெளியேற்றப்பட்ட அசீம், விக்ரமன் - காரணம் இதுதான்!

பிக்பாஸ்

பிக்பாஸ்

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் டாஸ்காக நீயும் பொம்மை, நானும் பொம்மை என்ற கேம் வழங்கப்பட்டது.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் 19-வது நாளிற்கான முதலாவது ப்ரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் கடந்த 9-ம் தேதி தொடங்கியுள்ளது. இந்நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, அசல் கோலார், ஷிவின் கணேசன், முகமது அசீம், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, ஷெரீனா, மணிகண்ட ராஜேஷ், ரக்ஷிதா மகாலட்சுமி, ராம் ராமசாமி, ஆர்யன் தினேஷ் கனகரத்தினம், ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மகேஸ்வரி சாணக்கியன், வி.ஜே.கதிரவன், குயின்சி ஸ்டான்லி, நிவா,தனலட்சுமி என 20 போட்டியாளர்கள் பங்கேற்றனர். மைனா நந்தினி வைல்ட்கார்ட் எண்ட்ரியாக 21-வது நபராக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தார்.

கடந்த வாரம் இரண்டு பேர் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினர். முதலாவதாக ஜிபி முத்து நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக சனிகிழமை வீட்டை விட்டு வெளியேறினார். அடுத்ததாக எலிமினேஷன் லிஸ்ட்டில் இருந்த டான்ஸ் மாஸ்டர் சாந்தி குறைவான வாக்குகளை பெற்றதல் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் மீதம் உள்ள 19 போட்டியாளர்களுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடந்து ஒளிபரப்பபடுகிறது. இந்த வாரம் பிக்பாஸ் வீட்டின் கேப்டனாக குயின்சி தேர்வு செய்யப்பட்ட நிலையில், அசீம், மகேஸ்வரி, ஆயிஷா, அசல், ரச்சிதா, ஜனனி மற்றும் ஆர்யன் தினேஷ் கனகரத்தினம் எலிமினேஷனுக்காக நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

Also read... தளபதி 67 படத்தில் விஜயுடன் இணைந்து நடிக்கும் பிக்பாஸ் பிரபலங்கள்?

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் டாஸ்காக நீயும் பொம்மை, நானும் பொம்மை என்ற கேம் வழங்கப்பட்டது. அந்த டாஸ்கில் வீட்டில் உள்ள 19 போட்டியாளர்களின் பெயர்களும் ஒட்டப்பட்ட பொம்மைகள் கார்டர் ஏரியாவில் அமைக்கப்பட்டது. அதில் போட்டியாளர்கள் தன்னுடைய பெயர் இல்லாமல் மற்றவரின் பெயர் உள்ள பொம்மைய எடுத்து குறிப்பிட்ட இடத்திற்கு கொண்டு சேர்க்க வேண்டும்.

ஒவ்வொரு சுற்றிலும் ஒவ்வொறு போட்டியாளர்கள் வெளியேற்றப்படுவார்கள். கடந்த செவ்வாய் கிழமை தொடங்கிய இந்த டாஸ்கால் பிக்பாஸ் வீட்டிற்குள் பல கலவரங்கள் ஏற்பட்டது.

இந்நிலையில் இன்று 19-வது நாளிற்கான முதல் ப்ரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. அதில் டால் ஹவுசில் ஒரு இடம் காலியாக உள்ள நிலையில், அசல் அசீம் பெயர் கொண்ட பொம்மையையும் அசீம் விக்ரமன் பெயர் கொண்ட பொம்மையையும் எடுத்துச்சென்று டால் ஹவுசில் வைக்காத காரணத்தால் அசீம் மற்றும் விக்ரமன் இருவரும் இந்த சுற்றில் இருந்து வெளியேற்றப்படுவதாக பிக்பாஸ் அறிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Bigg Boss Tamil 6