ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஜனனி செய்த தவறுக்கு தனலட்சுமியை திட்டித்தீர்க்கும் அசீம் - வெளியானது ப்ரோமோ

ஜனனி செய்த தவறுக்கு தனலட்சுமியை திட்டித்தீர்க்கும் அசீம் - வெளியானது ப்ரோமோ

பிக்பாஸ்

பிக்பாஸ்

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டின் கேப்டனாக குயின்சி தேர்வு செய்யப்பட்ட நிலையில், அசீம், மகேஸ்வரி, ஆயிஷா, அசல், ரச்சிதா, ஜனனி மற்றும் ஆர்யன் தினேஷ் கனகரத்தினம் எலிமினேஷனுக்காக நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் 17-வது நாளிற்கான முதலாவது ப்ரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் கடந்த 9-ம் தேதி தொடங்கியுள்ளது. இந்நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, அசல் கோலார், ஷிவின் கணேசன், முகமது அசீம், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, ஷெரீனா, மணிகண்ட ராஜேஷ், ரக்ஷிதா மகாலட்சுமி, ராம் ராமசாமி, ஆர்யன் தினேஷ் கனகரத்தினம், ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மகேஸ்வரி சாணக்கியன், வி.ஜே.கதிரவன், குயின்சி ஸ்டான்லி, நிவா,தனலட்சுமி என 20 போட்டியாளர்கள் பங்கேற்றனர். மைனா நந்தினி வைல்ட்கார்ட் எண்ட்ரியாக 21-வது நபராக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தார்.

கடந்த வாரம் இரண்டு பேர் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினர். முதலாவதாக ஜிபி முத்து தனது குழந்தைகளை பார்க்காமல் இருக்க முடியவில்லை என்று கூறி நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக சனிகிழமை வீட்டை விட்டு வெளியேறினார். அடுத்ததாக கடந்த வாரம் எலிமினேஷன் லிஸ்ட்டில் இருந்த டான்ஸ் மாஸ்டர் சாந்தி குறைவான வாக்குகளை பெற்றதல் சனிகிழமை நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் மீதம் உள்ள 19 போட்டியாளர்களுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடந்து ஒளிபரப்பபடுகிறது. இந்த வாரம் பிக்பாஸ் வீட்டின் கேப்டனாக குயின்சி தேர்வு செய்யப்பட்ட நிலையில், அசீம், மகேஸ்வரி, ஆயிஷா, அசல், ரச்சிதா, ஜனனி மற்றும் ஆர்யன் தினேஷ் கனகரத்தினம் எலிமினேஷனுக்காக நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் டாஸ்காக நீயும் பொம்மை, நானும் பொம்மை என்ற கேம் வழங்கப்பட்டது. அந்த டாஸ்கில் வீட்டில் உள்ள 19 போட்டியாளர்களின் பெயர்களும் ஒட்டப்பட்ட பொம்மைகள் கார்டர் ஏரியாவில் அமைக்கப்பட்டது. அதில் போட்டியாளர்கள் தன்னுடைய பெயர் இல்லாமல் மற்றவரின் பெயர் உள்ள பொம்மைய எடுத்து குறிப்பிட்ட இடத்திற்கு கொண்டு சேர்க்க வேண்டும். அந்த இடத்தில் 18 பொம்மைகள் மட்டுமே வைக்கும் அளவிற்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. மீதம் உள்ள 1 பொம்மையில் யார் பெயர் உள்ளதோ அவர் இந்த போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார் என்றும் முன்னதாக அறிவித்தனர்.

Also read... தேவர் மகன் தமிழ் சினிமாவின் காட்ஃபாதர்

இவ்வாறு ஒவ்வொரு போட்டியாளர்கள் வெளியேற்றப்படும்போதும் ஒவ்வொரு இடமாக குறைக்கப்பட்டு வரும். இறுதியில் இருக்கு 3 பொம்மைகளில் உள்ள பெயர் கொண்ட நபர்கள் அடுத்தவாரம் நாமினேஷனில் இருந்து காப்பாற்றப்படுவார்கள். அவ்வாறாக நேற்று இந்த போட்டி ஆரம்பித்தபோது முதலாவதாக மணிகண்டன் போட்டியை விட்டு வெளியேற்றப்பட்டார். அடுத்ததாக குயின்சி மற்றும் நந்தினி, ஜனனி ஆகியோர் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

இந்நிலையில் இன்று 17-வது நாளிற்கான முதல் ப்ரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. அதில் மீதமுள்ள போட்டியாளர்கள் பொம்மைகளை எடுத்துகொண்டு ஓடும் போது ஜனனி இடையில் நின்று வழியை மறித்தபோது தனலட்சுமி ஷெரினா ஆகியோர் கீழே விழுந்தனர்.

ஆனால் அசீம் தனலட்சுமி மீது பழியை போட்டு நீயெல்லாம் பொண்ணுதான என்று அவரை திட்டித்தீர்க்கும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Bigg Boss Tamil 6