ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பிக்பாஸில் ஆயிஷாவிடம் வாடி... போடி... என்று ஒருமையில் பேசிய அசீம் - வெளியானது கலேபர ப்ரோமோ!

பிக்பாஸில் ஆயிஷாவிடம் வாடி... போடி... என்று ஒருமையில் பேசிய அசீம் - வெளியானது கலேபர ப்ரோமோ!

பிக்பாஸ்

பிக்பாஸ்

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டின் கேப்டனாக ஜிபி முத்து தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த வார எலிமினேஷன் லிஸ்டில் ஆயிஷா, அசீம், தனலட்சுமி, மகேஸ்வரி, நிவா, குயின்சி, ரச்சிதா, ராம், சாந்தி, ஷெரினா, ஷிவின், விக்ரமன் ஆகியோர் உள்ளனர்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

எனக்கு தகுதி இல்லனு சொல்றதுக்கு நீங்க யாருனு ஆயிஷா கேட்க வாக்குவாதம் முற்றி அசீம் வாடி, போடி என்று பேசும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் கடந்த 9-ம் தேதி தொடங்கியுள்ளது. இந்நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, அசல் கோலார், ஷிவின் கணேசன், முகமது அசீம், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, ஷெரீனா, மணிகண்ட ராஜேஷ், ரக்ஷிதா மகாலட்சுமி, ராம் ராமசாமி, ஆர்யன் தினேஷ் கனகரத்தினம், ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மகேஸ்வரி சாணக்கியன், வி.ஜே.கதிரவன், குயின்சி ஸ்டான்லி, நிவா,தனலட்சுமி என 20 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

பிக்பாஸில் பொதுவாக 40 நாட்களை கடந்து வரும் சண்டைகள் அனைத்தும் இந்த சீசனின் முதல் இரண்டு நாட்களிலேயே தொடங்கிவிட்டது. இதற்கு சனிகிழமை நடந்த எபிசோடில் கமல் வாழ்த்துகளையும் தெரிவித்தார். மேலும் 20 போட்டியாளர்கள் ஏற்கெனவே உள்ள நிலையில்நேற்று மைனா நந்தினி வைல்ட்கார்ட் எண்ட்ரியாக 21-வது நபராக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார்.

மேலும் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டின் கேப்டனாக ஜிபி முத்து தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த வார எலிமினேஷன் லிஸ்டில் ஆயிஷா, அசீம், தனலட்சுமி, மகேஸ்வரி, நிவா, குயின்சி, ரச்சிதா, ராம், சாந்தி, ஷெரினா, ஷிவின், விக்ரமன் ஆகியோர் உள்ளனர்.

இந்நிலையில் 12-வது நாளிற்கான முதல் ப்ரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. அதில் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் 1 முதல் 13 வரை தங்களை ரேங்கிங் செய்துகொள்ள பிக்பாஸ் கூறினார்.

Also read... Prince Movie Review: தீபாவளி ரேசில் ஜெயித்ததா பிரின்ஸ்.. சிவகார்த்திகேயன் ஃபார்முலா வெற்றியா, படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம்!

அதில் முதலாவதாக மகேஷ்வரியும், 2-வது சாந்தி, 3-வது குயின்சி, 4வது ரக்சிதா, 5-வது ஆர்யன் தினேஷ் கனகரத்தினம், 6-வது விக்ரமன், 7-வது  ஷெரீனா, 8-வது ஜனனி, 9-வது ஆயிஷா, 10-வது ராம், 11-வது அச, 12-வது அசீம், 13-வது ஜிபி முத்து என வரிசையாக இருந்தனர்.

அப்போது வந்து பேசிய அசீம், தகுதி இல்லாத பலபேர் இங்க இருக்காங்க, ஃபர்ஸ்டா இருக்கட்டும், சிக்ஸ்த்தா இருக்கட்டும், நயன்த்துலாம் சுத்தமா தகுதியே இல்லாத ஆளு என்று கூறினார்.

அப்போது ஆயிஷா தகுதி இல்லனு எந்த பேஸ்ல சொன்னீங்கனு கேக்க நீ தூக்கத்த தவிற என்ன பன்னுனனு அசீம் கேட்க நீங்க தூங்கவே இல்லையானு ஆயிஷா திரும்ப கேட்க வாக்குவாதம் முற்றியாது.

அப்போது கத்தி பேசாத என்கிட்டனு ஆயிஷாவை பார்த்து அசீம் கூற நீங்க என்ன பத்தி பேசுனா அப்படிதான் பேசுவேனு ஆயிஷா சொல்ல அவரை பார்த்து அசீம் வாடி போடி என்று பேச பிக்பாஸ் வீடே கலேபரமாக காட்சியளிக்கும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Bigg Boss Tamil 6