• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Bigg Boss Tamil : இமான் அண்ணாச்சியை பிளான் பண்ணி வெளியேற்றினாரா இசை?

Bigg Boss Tamil : இமான் அண்ணாச்சியை பிளான் பண்ணி வெளியேற்றினாரா இசை?

பிக் பாஸ் 5 அண்ணாச்சி

பிக் பாஸ் 5 அண்ணாச்சி

பொம்மை டாஸ் தொடங்கியது. முதல் நாளே சண்டை, பேச்சு, அடிதடிக்கு குறைவு இல்லாமல் டாஸ்க் நடைப்பெற்றது.

  • Share this:
    பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தற்போது ஒளிபரபாகி வரும் நிலையில் இன்றைய நாளுக்கான முதல் புரமோ காரசாரமாக வெளியாகியுள்ளது.

    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ஐந்தாவது சீசன் 18 போட்டியாளர்களுடன் தொடங்கியது. இதில் தனிப்பட்ட காரணங்களால் நமீதா மாரிமுத்து, நிகழ்ச்சியை விட்டு வெளியேற, 17 போட்டியாளர்கள் இருந்தனர். இதையடுத்து நாடியா சங், அபிஷேக் ராஜா, சின்னப்பொண்ணு அடுத்தடுத்த வாரங்களில் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர்.கடந்த வாரம் நாமினேஷனில் ஸ்ருதி வெளியேற்றப்பட்டுள்ளார். கடந்த வாரம் நடைபெற்ற பஞ்சதந்திரம் டாஸ்கில், தாமரை உடை மாற்றிய போது அவரது நாணயத்தை ஸ்ருதி திருடியதால் பிரச்னை ஏற்பட்டது. இந்த பிரச்சனைதான் ஸ்ருதி வெளியேறியதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.ஆனால் சமூகவலைத்தளங்களில் ஸ்ருதிக்கு ஆதரவாக பல குரல்கள் ஒலித்து வருகின்றன. சூப்பராக கேம் விளையாடிய ஸ்ருதியை வெளியே அனுப்பியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த நிகழ்ச்சியில் தற்போது இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, பிரியங்கா, அபினய் வாடி, பாவனி, வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 13 போட்டியாளர்கள் உள்ளனர். இந்நிலையில் திங்கட்கிழமை தலைவருக்கான டாஸ்க் நடந்து முடிந்தது. டாஸ்கில் ஜெயித்தது அபிநவ் என்றாலும் நாணயத்தின் சக்தியை பயன்படுத்தி இசை இந்த வார தலைவர் ஆகியுள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் பொம்மை டாஸ் தொடங்கியது. முதல் நாளே சண்டை, பேச்சு, அடிதடிக்கு குறைவு இல்லாமல் டாஸ்க் நடைப்பெற்றது.

    இந்நிலையில் இன்றும் பிக் பாஸ் வீட்டுக்குள் பொம்மை டாஸ்க் தொடர்கிறது. இதில் இமான் அண்ணாச்சி பொம்மையை வைத்து ஓடிய இசை கடைசியாக கூடாரத்தின் உள்ளே நுழைந்ததால் அண்ணாச்சி போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதற்கான காரணத்தை அண்ணாச்சி லிவிங் ஏரியாவில் இருந்து சொல்ல, அதற்குள் இசை வேண்டுமென்றே செய்தது போல், ராஜூ பாய் கருத்து சொல்ல, அண்ணாச்சியும் அதை வழி மொழிய வீட்டுக்குள் சண்டை வெடிக்கிறது.



    ஆனால் எனக்கு அண்ணாச்சியை பிடிக்கும் என்கிறார் இசைவாணி. அதை நம்ப மாட்டோம் என்கின்றனர் ராஜூவும் அண்ணாச்சியும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: