ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

இந்த தலைவர் பதவியே வேண்டாங்க எனக்கு... பிக்பாஸில் ஜிபி முத்துவை புலம்பவிட்ட போட்டியாளர்கள் - கலகல ப்ரோமோ

இந்த தலைவர் பதவியே வேண்டாங்க எனக்கு... பிக்பாஸில் ஜிபி முத்துவை புலம்பவிட்ட போட்டியாளர்கள் - கலகல ப்ரோமோ

பிக்பாஸ்

பிக்பாஸ்

பிக்பாஸில் பொதுவாக 40 நாட்களை கடந்து வரும் சண்டைகள் அனைத்தும் இந்த சீசனின் முதல் இரண்டு நாட்களிலேயே தொடங்கிவிட்டது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் 8-வது நாளிற்கான மூன்றாவது ப்ரோமோ வீடியோவை நிக்ழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் கடந்த 9-ம் தேதி தொடங்கியுள்ளது. இந்நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, அசல் கோலார், ஷிவின் கணேசன், முகமது அசீம், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, ஷெரீனா, மணிகண்ட ராஜேஷ், ரக்ஷிதா மகாலட்சுமி, ராம் ராமசாமி, ஆர்யன் தினேஷ் கனகரத்தினம், ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மகேஸ்வரி சாணக்கியன், வி.ஜே.கதிரவன், குயின்சி ஸ்டான்லி, நிவா,தனலட்சுமி என 20 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

பிக்பாஸில் பொதுவாக 40 நாட்களை கடந்து வரும் சண்டைகள் அனைத்தும் இந்த சீசனின் முதல் இரண்டு நாட்களிலேயே தொடங்கிவிட்டது. இதற்கு சனிகிழமை நடந்த எபிசோடில் கமல் வாழ்த்துகளையும் தெரிவித்தார். மேலும் 20 போட்டியாளர்கள் ஏற்கெனவே உள்ள நிலையில்நேற்று மைனா நந்தினி வைல்ட்கார்ட் எண்ட்ரியாக 21-வது நபராக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார்.

Also read... பள்ளிகளில் காதலிப்பது போன்ற காட்சிகளை சினிமாவில் தவிர்க்க வேண்டும் - நடிகர் தாமு

இந்நிலையில் பிக்பாஸில் 8-வது நாளான இன்று மூன்றாவது ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டின் கேப்டனாக ஜிபி முத்து தேர்வு செய்யப்பட்டுள்ளார். வீட்டின் உள்ள மற்ற போட்டியாளர்கள் அனைவரும் தலைவரே இது வேணும், தலைவரே இது வேணும்... தலைவரே... தலைவரே... என்று சுற்றி சுற்றி வருகின்றனர்.

இதனால் கடுப்பான ஜிபி முத்து எனக்கு இந்த தலைவர் பதவியே வேண்டாம் என்று கூறும் காமெடியான ப்ரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Bigg Boss Tamil 6