ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பிக்பாஸ் ரச்சிதா வாழ்க்கையில இவ்வளவு சோகமா... வெளியானது வீடியோ!

பிக்பாஸ் ரச்சிதா வாழ்க்கையில இவ்வளவு சோகமா... வெளியானது வீடியோ!

பிக்பாஸ்

பிக்பாஸ்

இந்த வார கேப்டனாக மணிகண்டன் தேர்வான நிலையில், விக்ரமன், ரச்சிதா, அசீம், ஷிவின், கதிரவன், மைனா நந்தினி மற்றும் தனலட்சுமி ஆகியோர் இந்த வார எவிக்‌ஷனுக்காக நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் கடந்த மாதம் அக்டோபர் 9-ம் தேதி தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, அசல் கோலார், ஷிவின் கணேசன், முகமது அசீம், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, ஷெரீனா, மணிகண்ட ராஜேஷ், ரக்ஷிதா மகாலட்சுமி, ராம் ராமசாமி, ஆர்யன் தினேஷ் கனகரத்தினம், ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மகேஸ்வரி சாணக்கியன், வி.ஜே.கதிரவன், குயின்சி ஸ்டான்லி, நிவா,தனலட்சுமி என 20 போட்டியாளர்கள் பங்கேற்றனர். மைனா நந்தினி வைல்ட்கார்ட் எண்ட்ரியாக 21-வது நபராக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தார்.

முதல் வார இறுதியில் எலிமினேஷன் இல்லாத நிலையில் இரண்டாவது வாரம் இரண்டு பேர் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினர். முதலாவதாக ஜிபி முத்து நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக வீட்டை விட்டு வெளியேறினார். அடுத்ததாக எலிமினேஷன் லிஸ்ட்டில் இருந்த டான்ஸ் மாஸ்டர் சாந்தி குறைவான வாக்குகளை பெற்றதல் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதனை தொடர்ந்து அடுத்த அடுத்த வாரங்களில் தொடர்ந்து அசல், ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட், குயின்சி, ராம்,ஆயிஷா எலிமினேட் செய்யப்பட்ட நிலையில் கடந்த வாரம் ஜனனி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.

தொடர்ந்து மீதம் உள்ள 10 போட்டியாளர்களுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடந்து ஒளிபரப்பபடுகிறது. இந்த வார கேப்டனாக மணிகண்டன் தேர்வான நிலையில், விக்ரமன், ரச்சிதா, அசீம், ஷிவின், கதிரவன், மைனா நந்தினி மற்றும் தனலட்சுமி ஆகியோர் இந்த வார எவிக்‌ஷனுக்காக நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கு கனா காணும் காலங்கள் என்ற டாஸ்க் வழக்கப்பட்டுள்ளது. பிக்பாஸ் வீடு பள்ளிக்கூடமாக மாற அசீம் மற்றும் விக்ரமன் ஆசிரியர்களாக உள்ளனர். மற்ற எட்டு போட்டியாளர்களும் மாணவர்களாக இருப்பது முதல் ப்ரோமோ வீடியோவில் தெரியவந்தது.

Also read... மீண்டும் பொய் சொன்ன செந்தில்.. வீட்டை விட்டு கிளம்பும் அமுதா - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்

இதனை தொடர்ந்து இரண்டாவது மற்றும் மூன்றாவது ப்ரோமோ வீடியோவில் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவரும் தங்களது குழந்தை பருவத்தில் சந்தித்த பிரச்னைகளை பகிர்ந்து வருகின்றனர். இதில் தனது குழந்தை பருவத்தை கூறும் ரச்சிதா உடைந்து அழுகிறார். எனது அப்பா ஒரு ட்ரைவர்.. அம்மா சுத்தமா படிக்கல அதனால என்ன படிக்க சொல்லி அதிகமா அடிப்பாங்க.. நான் சரியா படிக்கலனா என் கழுத்த பிடிச்சு நெறிப்பாங்க நீ செத்துடு பொண்ணா வேற பொறந்துட்ட என்று அடிப்பங்க என்று ரச்சிதா அழுதுகொண்டே பேசும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Bigg Boss Tamil 6