ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கனவோடு வந்தேன்... இங்க நானே என்ன அசிங்கப்படுத்திபேனோ? - பிக்பாஸ் வீட்டில் கதறி அழுகும் தனலட்சுமி!

கனவோடு வந்தேன்... இங்க நானே என்ன அசிங்கப்படுத்திபேனோ? - பிக்பாஸ் வீட்டில் கதறி அழுகும் தனலட்சுமி!

பிக்பாஸ்

பிக்பாஸ்

கனவோடு வந்தேன், இங்க நானே என்ன அசிங்கப்படுத்திபேனோ என்று பிக்பாஸ் வீட்டில் தனலட்சுமி கதறி அழுகும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் கடந்த மாதம் அக்டோபர் 9-ம் தேதி தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, அசல் கோலார், ஷிவின் கணேசன், முகமது அசீம், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, ஷெரீனா, மணிகண்ட ராஜேஷ், ரக்ஷிதா மகாலட்சுமி, ராம் ராமசாமி, ஆர்யன் தினேஷ் கனகரத்தினம், ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மகேஸ்வரி சாணக்கியன், வி.ஜே.கதிரவன், குயின்சி ஸ்டான்லி, நிவா,தனலட்சுமி என 20 போட்டியாளர்கள் பங்கேற்றனர். மைனா நந்தினி வைல்ட்கார்ட் எண்ட்ரியாக 21-வது நபராக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தார்.

முதல் வார இறுதியில் எலிமினேஷன் இல்லாத நிலையில் இரண்டாவது வாரம் இரண்டு பேர் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினர். முதலாவதாக ஜிபி முத்து நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக வீட்டை விட்டு வெளியேறினார். அடுத்ததாக எலிமினேஷன் லிஸ்ட்டில் இருந்த டான்ஸ் மாஸ்டர் சாந்தி குறைவான வாக்குகளை பெற்றதல் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதனை தொடர்ந்து அடுத்த அடுத்த வாரங்களில் தொடர்ந்து அசல், ஷெரினா மற்றும் மகேஸ்வரி வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டனர்.

இந்நிலையில் மீதம் உள்ள 16 போட்டியாளர்களுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடந்து ஒளிபரப்பபடுகிறது. கடந்த வாரம் நடைபெற்ற டாஸ்கின் அடிப்படையில் ரக்‌ஷிதா, அமுதவாணன், மணிகண்டன் மற்றும் விக்ரமன் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டதால் இந்த வாரம் எலிமினேஷன் ஃப்ரீ சோனில் உள்ளனர். அதனால் வீட்டில் உள்ள மற்ற போட்டியாளர் யாரும் இந்த 4 நபர்களை எலிமினேஷனிற்கு நாமினேட் செய்யமுடியாது.

Also read... நடிகர் மகேஷ் பாபுவின் தந்தை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

இந்நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டில் 36-வது நாளிற்கான 3-வது ப்ரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. அதில் தனலட்சுமி கனவோடு வந்தேன், இங்க நானே என்ன அசிங்கப்படுத்திபேனோ, வெளில சொல்ல முடியாத அளவுக்கு அவமானமா இருக்கு, இந்த சின்ன விசயம் இவ்வளவு பெருசா வெடிக்கும்னு எனக்கு தெரியாது. நான் நியாமா விளையாடிட்டு இருக்கேனுதான் இவ்வளவு நாள் நினைச்சுட்டு இருந்தேன். திருடி மாதிரி இருக்கு எனக்கு நான் திருடல என்று தனலட்சுமி கதறி அழுகும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

முன்னதாக போனவாரம் நடைபெற்ற இனிப்பு ஃபேக்ட்ரி டாஸ்கில் கண்ணா லட்டு தின்ன ஆசையா கடையில் முதலாளியாக தனலட்சுமி செயல்பட்டார். அப்போது கடைக்கு வரும் வருமானத்தை கல்லா பெட்டியிலேயே வைத்து பாதுகாக்க வேண்டும் என்பது ரூல். ஆனால் தனலட்சுமி தனது பணத்தை வெளியே எடுத்து மறைத்துவைத்தார். ஆனால் இது மற்ற ஹவுஸ்மெட்களுக்கு தெரியவில்லை இதனால் இந்த வாரம் தனலட்சுமி நாமினேஷன் ஃப்ரீ சோனிற்கு சென்றார்.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கமல், தனலட்சுமி நீங்கள் செய்தது ரூல் ப்ரேக்கிங். அதை நானும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் மக்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதனால் இப்படி ஒரு வெற்றியை நீங்கள் தக்கவைத்துக்கொள்ள முடியாது... இந்த வெற்றி உங்களிடமிருந்து பறிக்கப்பட்டு நியாயமான வெற்றியாளரிடம் அது சேர வேண்டும்... இதை செய்ய முடியும் என்பதற்காகவே செய்து காட்டுகிறேன் என்று நாமினேஷனில் இருந்து நீங்க ஃப்ரீ என்ற அந்த உரிமை உங்களிடம் இருந்து பறிக்கப்பட்டு நியாயமாக விளையாடிய விக்ரமனுக்கு அது கொடுக்கப்படுகிறது என்று கமல் தெரிவித்தார்.

மேலும் இந்த விசயத்தில் இந்த மாதிரி விளையாடிய தனலட்சுமி உங்களை தண்டிக்கிறேன்... இதற்கு உறுதுணையாக இருந்தவர்களை கண்டிக்கிறேன் என்றும் தெரிவித்தார். இது தான் தனலட்சுமி இன்று அழுததற்கான காரணம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Bigg Boss Tamil 6