ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

மீண்டும் முட்டிக்கொள்ளும் மகேஸ்வரி மற்றும் அசீம் - வெளியானது ப்ரோமோ வீடியோ!

மீண்டும் முட்டிக்கொள்ளும் மகேஸ்வரி மற்றும் அசீம் - வெளியானது ப்ரோமோ வீடியோ!

பிக்பாஸ்

பிக்பாஸ்

பிக்பாஸ் வீட்டில் மகேஸ்வரி மற்றும் அசீம் இடையே மீண்டும் சண்டை வரும் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் கடந்த மாதம் அக்டோபர் 9-ம் தேதி தொடங்கியுள்ளது. இந்நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, அசல் கோலார், ஷிவின் கணேசன், முகமது அசீம், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, ஷெரீனா, மணிகண்ட ராஜேஷ், ரக்ஷிதா மகாலட்சுமி, ராம் ராமசாமி, ஆர்யன் தினேஷ் கனகரத்தினம், ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மகேஸ்வரி சாணக்கியன், வி.ஜே.கதிரவன், குயின்சி ஸ்டான்லி, நிவா,தனலட்சுமி என 20 போட்டியாளர்கள் பங்கேற்றனர். மைனா நந்தினி வைல்ட்கார்ட் எண்ட்ரியாக 21-வது நபராக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தார்.

    முதல் வார இறுதியில் எலிமினேஷன் இல்லாத நிலையில் இரண்டாவது வாரம் இரண்டு பேர் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினர். முதலாவதாக ஜிபி முத்து நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக வீட்டை விட்டு வெளியேறினார். அடுத்ததாக எலிமினேஷன் லிஸ்ட்டில் இருந்த டான்ஸ் மாஸ்டர் சாந்தி குறைவான வாக்குகளை பெற்றதல் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதனை தொடர்ந்து அடுத்த அடுத்த வாரங்களில் தொடர்ந்து அசல் மற்றும் ஷெரினா வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டனர்.

    இந்நிலையில் மீதம் உள்ள 17 போட்டியாளர்களுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடந்து ஒளிபரப்பபடுகிறது. இந்த வாரம் பிக்பாஸ் வீட்டின் கேப்டனாக மைனா நந்தினி தேர்வு செய்யப்பட்ட நிலையில், அசீம், ஆயிஷா, விக்ரமன், ஏடிகே, தனலட்சுமி, ராம், மகேஸ்வரி ஆகியோர் எலிமினேஷனுக்காக நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

    நேற்று பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கு ஒரு டாஸ்க் வழங்கப்பட்டது. அதில் போட்டியாளர்கள் இரண்டு அணிகளாக பிரிந்து இனிப்புகள் தயாரித்து விற்பனை செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது. அப்போது அந்த கடைகளுக்கு போட்டியாளர்கள் பெயர் வைத்தனர். ஒன்று கண்ணா லட்டு தின்ன ஆசையா? இன்னொரு கடை பெயர் அடை தேனடை என்று வைத்தனர். பிக்பாஸால் அனுப்பப்படும் பொருட்களை வைத்து அவர்கள் இனிப்புகளை செய்து விற்பனை செய்யுமாறு அந்த டாஸ்கில் அறிவிக்கப்பட்டது.

    Also read... காதலி சபா ஆசாத் உடன் நடிகர் ஹிருத்திக் ரோஷன் - வைரலாகும் போட்டோஸ்!

    இந்நிலையில் இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியின் 30-வது நாளிற்கான 3-வது ப்ரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. அதில் அடை தேனடை கடையின் உரிமையாளர் விக்ரமனிடம் மகேஸ்வரி பேசிக்கொண்டிருக்கும் போது வழக்கம் போல அசீம் குறிக்கிட்டு கத்திக்கொண்டிருந்தார். அப்போது விக்ரமன் அசீமை பார்த்து கத்தாதீங்க என்று கூற தொடர்ந்து மகேஸ்வரியிடம் வாக்குவாதத்தில் அசீம் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றிய நிலையில் அசீம் அந்த அணியைவிட்டு விலகுவதாக கூறும் வீடியோ வைரலாகி வருகின்றது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Bigg Boss Tamil 6