ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

விக்ரமன் பேச்சால் கடுப்பான குயின்சி... வெளியானது ப்ரோமோ வீடியோ!

விக்ரமன் பேச்சால் கடுப்பான குயின்சி... வெளியானது ப்ரோமோ வீடியோ!

பிக்பாஸ்

பிக்பாஸ்

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டின் கேப்டனாக மணிகண்டன் தேர்வு செய்யப்பட்ட நிலையில், அசீம், ஆயிஷா, விக்ரமன், கதிரவன் மற்றும் ஷெரினா ஆகியோர் எலிமினேஷனுக்காக நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் 25-வது நாளிற்கான 3-வது ப்ரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு தற்போது வெளியிட்டுள்ளது.

    நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் கடந்த மாதம் அக்டோபர் 9-ம் தேதி தொடங்கியுள்ளது. இந்நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, அசல் கோலார், ஷிவின் கணேசன், முகமது அசீம், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, ஷெரீனா, மணிகண்ட ராஜேஷ், ரக்ஷிதா மகாலட்சுமி, ராம் ராமசாமி, ஆர்யன் தினேஷ் கனகரத்தினம், ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மகேஸ்வரி சாணக்கியன், வி.ஜே.கதிரவன், குயின்சி ஸ்டான்லி, நிவா,தனலட்சுமி என 20 போட்டியாளர்கள் பங்கேற்றனர். மைனா நந்தினி வைல்ட்கார்ட் எண்ட்ரியாக 21-வது நபராக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தார்.

    முதல் வார இறுதியில் எலிமினேஷன் இல்லாத நிலையில் இரண்டாவது வாரம் இரண்டு பேர் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினர். முதலாவதாக ஜிபி முத்து நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக வீட்டை விட்டு வெளியேறினார். அடுத்ததாக எலிமினேஷன் லிஸ்ட்டில் இருந்த டான்ஸ் மாஸ்டர் சாந்தி குறைவான வாக்குகளை பெற்றதல் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் மூன்றாவது வாரமான கடந்த ஞாயிறு அன்று அசல் குறைந்த வாக்குகளைப் பெற்று பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

    இந்நிலையில் மீதம் உள்ள 18 போட்டியாளர்களுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடந்து ஒளிபரப்பபடுகிறது. இந்த வாரம் பிக்பாஸ் வீட்டின் கேப்டனாக மணிகண்டன் தேர்வு செய்யப்பட்ட நிலையில், அசீம், ஆயிஷா, விக்ரமன், கதிரவன் மற்றும் ஷெரினா ஆகியோர் எலிமினேஷனுக்காக நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

    Also read... இணையத்தில் வைரலாகும் காஜல் அகர்வாலின் கோஸ்டி பட ஸ்டில்ஸ்!

    இதனை தொடர்ந்து இந்த வார தொடக்கத்தில் பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு இந்த வார டாஸ்க் அறிவிக்கப்பட்டது. அதில் பிக்பாஸ் வீடு இந்த வாரம் முழுவதும் டிவி சேனலாக மாறி ராசி பலன், குக்கிங் ஷோ, பிரைம் டைம் ஷோ டிபேட், சீரியல், நியூஸ் வாசப்பது என ஒவ்வொரு போட்டியாளர்களும் கலந்துகொண்டு தங்களது திறமையை வெளிபடுத்த உள்ளனர்.

    அந்த சேனல்களுக்கு இந்த டிவி, அந்த டிவி என பெயர் வைத்த பிக்பாஸ் இந்த இரண்டு டிவி போட்டிகளை அவர்களே நடுவர்களாக இருந்து மதிப்பிட்டு ரேட்டிங் வழங்கவும் கூறியுள்ளார்.

    இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் 23-வது நாளிற்கான மூன்றாவது ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் நியூஸ் வாசிப்பதற்கான போட்டி நடைபெறும் போது அமுதவானன் குயின்சியின் பெயரை கூறியுள்ளார். அதற்கு விக்ரமன் அவர் வேண்டாம் ஜனனி வாசிக்கட்டும் என்றும் கூறியுள்ளார். இதனை பார்த்த குயின்சி விக்ரமனிடம் கடுப்பாகி பேசியுள்ளார். அதனை தொடர்ந்து விக்ரமன் குயின்சியை சமாதானம் செய்ய முயற்சி செய்யும் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Bigg Boss Tamil 6