ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

நீங்க என்ன ஜட்ஜ்க்கு படிச்சிட்டு வந்துருக்கீங்களா? அசீமிடம் கடுப்பான மகேஸ்வரி - வெளியானது வீடியோ!

நீங்க என்ன ஜட்ஜ்க்கு படிச்சிட்டு வந்துருக்கீங்களா? அசீமிடம் கடுப்பான மகேஸ்வரி - வெளியானது வீடியோ!

 பிக்பாஸ்

பிக்பாஸ்

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டின் கேப்டனாக மணிகண்டன் தேர்வு செய்யப்பட்ட நிலையில், அசீம், ஆயிஷா, விக்ரமன், கதிரவன் மற்றும் ஷெரினா ஆகியோர் எலிமினேஷனுக்காக நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நீங்க என்ன ஜட்ஜ்க்கு படிச்சிட்டு வந்துருக்கீங்களா? எதாவது சொல்லிட்டே இருக்கீங்க என்று அசீமிடம் மகேஸ்வரி கடுப்பாகி கத்தும் வீடியோ வெளியாகியுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் கடந்த மாதம் அக்டோபர் 9-ம் தேதி தொடங்கியுள்ளது. இந்நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, அசல் கோலார், ஷிவின் கணேசன், முகமது அசீம், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, ஷெரீனா, மணிகண்ட ராஜேஷ், ரக்ஷிதா மகாலட்சுமி, ராம் ராமசாமி, ஆர்யன் தினேஷ் கனகரத்தினம், ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மகேஸ்வரி சாணக்கியன், வி.ஜே.கதிரவன், குயின்சி ஸ்டான்லி, நிவா,தனலட்சுமி என 20 போட்டியாளர்கள் பங்கேற்றனர். மைனா நந்தினி வைல்ட்கார்ட் எண்ட்ரியாக 21-வது நபராக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தார்.

முதல் வார இறுதியில் எலிமினேஷன் இல்லாத நிலையில் இரண்டாவது வாரம் இரண்டு பேர் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினர். முதலாவதாக ஜிபி முத்து நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக வீட்டை விட்டு வெளியேறினார். அடுத்ததாக எலிமினேஷன் லிஸ்ட்டில் இருந்த டான்ஸ் மாஸ்டர் சாந்தி குறைவான வாக்குகளை பெற்றதல் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் மூன்றாவது வாரமான கடந்த ஞாயிறு அன்று அசல் குறைந்த வாக்குகளைப் பெற்று பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் மீதம் உள்ள 18 போட்டியாளர்களுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடந்து ஒளிபரப்பபடுகிறது. இந்த வாரம் பிக்பாஸ் வீட்டின் கேப்டனாக மணிகண்டன் தேர்வு செய்யப்பட்ட நிலையில், அசீம், ஆயிஷா, விக்ரமன், கதிரவன் மற்றும் ஷெரினா ஆகியோர் எலிமினேஷனுக்காக நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து இன்று பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு இந்த வார டாஸ்க் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் பிக்பாஸ் வீடு இந்த வாரம் முழுவதும் டிவி சேனலாக மாறி ராசி பலன், குக்கிங் ஷோ, பிரைம் டைம் ஷோ டிபேட், சீரியல் என ஒவ்வொரு போட்டியாளர்களும் கலந்துகொண்டு தங்களது திறமையை வெளிபடுத்த உள்ளனர்.

Also read... மீண்டும் சந்திரமுகி கூட்டணி? ரஜினியின் 170வது படத்தில் இணையும் முக்கிய இரு நடிகர்கள்.?! தீயாய் பரவும் தகவல்

அந்த சேனல்களுக்கு இந்த டிவி, அந்த டிவி என பெயர் வைத்த பிக்பாஸ் இந்த இரண்டு டிவி போட்டியளர்களை தவிற மற்றவர்களை நடுவர்களாக இருந்து மதிப்பிடவும் கூறியுள்ளார்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் 23-வது நாளிற்கான மூன்றாவது ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் அசீம் பெட்ரூமில் அமர்ந்து ஏடிகேவிடம் எப்படி ஜட்ஜ் செய்வது என்று கூறிக்கொண்டிருந்தார். அப்போது கடுப்பான மகேஸ்வரி நீங்க எதுக்கு சொல்றீங்க நீங்க என்ன ஜட்ஜ்க்கு படிச்சுட்டு வந்துருக்கீங்களா என்று கேட்க, அசீம் உடனே உங்கள கவர்மெண்ட் அப்பாய்ண்ட் பன்னல ஜட்ஜ்ஜானு மகேஸ்வரியிடம் சொல்ல பதிலுக்கு மகேஸ்வரி உங்களுக்கு கொடுத்த வேலைய நீங்க சரியா பன்னுங்க இங்க உங்காந்து சும்மா புலம்பி கத்திகிட்டு இருக்காதிங்க என்று கடுப்பாகி பேசும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Bigg Boss Tamil 6