ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பிக்பாஸில் நீயும் பொம்மை, நானும் பொம்மை டாஸ்கில் அடுத்த சண்டை - தனலட்சுமியிடம் கடுப்பான மாகேஸ்வரி!

பிக்பாஸில் நீயும் பொம்மை, நானும் பொம்மை டாஸ்கில் அடுத்த சண்டை - தனலட்சுமியிடம் கடுப்பான மாகேஸ்வரி!

பிக்பாஸ்

பிக்பாஸ்

பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் 16-வது நாளிற்கான மூன்றாவது ப்ரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் கடந்த 9-ம் தேதி தொடங்கியுள்ளது. இந்நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, அசல் கோலார், ஷிவின் கணேசன், முகமது அசீம், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, ஷெரீனா, மணிகண்ட ராஜேஷ், ரக்ஷிதா மகாலட்சுமி, ராம் ராமசாமி, ஆர்யன் தினேஷ் கனகரத்தினம், ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மகேஸ்வரி சாணக்கியன், வி.ஜே.கதிரவன், குயின்சி ஸ்டான்லி, நிவா,தனலட்சுமி என 20 போட்டியாளர்கள் பங்கேற்றனர். மைனா நந்தினி வைல்ட்கார்ட் எண்ட்ரியாக 21-வது நபராக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தார்.

கடந்த வாரம் இரண்டு பேர் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினர். முதலாவதாக ஜிபி முத்து தனது குழந்தைகளை பார்க்காமல் இருக்க முடியவில்லை என்று கூறி நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக சனிகிழமை வீட்டை விட்டு வெளியேறினார். அடுத்ததாக கடந்த வாரம் எலிமினேஷன் லிஸ்ட்டில் இருந்த டான்ஸ் மாஸ்டர் சாந்தி குறைவான வாக்குகளை பெற்றதல் சனிகிழமை நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் மீதம் உள்ள 19 போட்டியாளர்களுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடந்து ஒளிபரப்பபடுகிறது. இந்த வாரம் பிக்பாஸ் வீட்டின் கேப்டனாக குயின்சி தேர்வு செய்யப்பட்ட நிலையில், அசீம், மகேஸ்வரி, ஆயிஷா, அசல், ரச்சிதா, ஜனனி மற்றும் ஆர்யன் தினேஷ் கனகரத்தினம் எலிமினேஷனுக்காக நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

Also read... வண்ண வண்ண பட்டாசுகளை வெடித்து குடும்பத்தினருடன் தீபாவளியை கொண்டாடிய ரோஜா!

இந்நிலையில் இன்று 16-வது நாளிற்கான மூன்றாவது ப்ரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. அதில் இந்த வார டாஸ்கான நீயும் பொம்மை, நானும் பொம்மை என்ற விளையாட்டில் மகேஸ்வரி தோறக வேண்டும் என்ற நோக்கில் அவர் பெயர் உள்ள பொம்மையை தனலட்சுமி கையில் எடுத்து வைத்துக் கொண்டு குறிப்பிட்ட இடத்தை நோக்கி ஓடாமல் அதே இடத்தில் இருந்தார்.

முன்னதாக வெளியான முதல் ப்ரோமோ வீடியோவில் பசர் அடித்த உடன் அனைவரும் பொம்மைகளை எடுத்துக்கொண்டு ஓடும் போது ஷெரினா மட்டும் ஜனனியின் பெயர் உள்ள பொம்மையை எடுத்துக்கொண்டு ஓடாமல் அதே இடத்தில் இருந்தார். இதனால் ஜனனி போட்டியில் இருந்து விலக்கப்பட்டார்.

தற்போது அதே டெக்னிக்கை தனலட்சுமி பயன்படுத்த மகேஸ்வரியும் தனது கையில் ஒரு பொம்மையுடன் இருக்கிறார். பிறகு தனலட்சுமியிடம் மகேஸ்வரி ஏன் என் பொம்மையை எடுத்துட்டு போகல என்று கேட்க வேண்டும் என்றேதான் உங்க பொம்மையை எடுத்துட்டு போகல என்று பதிலளிக்கும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Bigg Boss Tamil 6