ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பிக்பாஸில் இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன்... நாமினேட் ஆனவர்கள் யார் யார் தெரியுமா?

பிக்பாஸில் இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன்... நாமினேட் ஆனவர்கள் யார் யார் தெரியுமா?

பிக்பாஸ்

பிக்பாஸ்

பிக்பாஸில் இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன் நடைபெற உள்ள நிலையில் நாமினேட் ஆனவர்கள் யார் யார் என்பது குறித்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் கடந்த மாதம் அக்டோபர் 9-ம் தேதி தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, அசல் கோலார், ஷிவின் கணேசன், முகமது அசீம், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, ஷெரீனா, மணிகண்ட ராஜேஷ், ரக்ஷிதா மகாலட்சுமி, ராம் ராமசாமி, ஆர்யன் தினேஷ் கனகரத்தினம், ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மகேஸ்வரி சாணக்கியன், வி.ஜே.கதிரவன், குயின்சி ஸ்டான்லி, நிவா,தனலட்சுமி என 20 போட்டியாளர்கள் பங்கேற்றனர். மைனா நந்தினி வைல்ட்கார்ட் எண்ட்ரியாக 21-வது நபராக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தார்.

முதல் வார இறுதியில் எலிமினேஷன் இல்லாத நிலையில் இரண்டாவது வாரம் இரண்டு பேர் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினர். முதலாவதாக ஜிபி முத்து நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக வீட்டை விட்டு வெளியேறினார். அடுத்ததாக எலிமினேஷன் லிஸ்ட்டில் இருந்த டான்ஸ் மாஸ்டர் சாந்தி குறைவான வாக்குகளை பெற்றதல் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதனை தொடர்ந்து அடுத்த அடுத்த வாரங்களில் தொடர்ந்து அசல், ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட் மற்றும் குயின்சி ஆகியோர் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டனர்.

இந்நிலையில் மீதம் உள்ள 13 போட்டியாளர்களுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடந்து ஒளிபரப்பபடுகிறது. இந்த வார கேப்டன் போட்டியில் மணிகண்டன், தனலட்சுமி மற்றும் ஷிவின் கலந்துகொள்ளும் வீடியோ முதல் ப்ரோமோவாக வெளியிடப்பட்டது. அதில் இந்த வாரம் மணிகண்டன் அல்லது தனலட்சுமிதான் தலைவராக உள்ளதாக தெரியவந்தது.

Also read... ''எப்போதும் பாலா அண்ணா உடன் துணை நிற்போம்''... 'வணங்கான்' விலகல் குறித்து சூர்யாவின் 2D நிறுவனம் பதில்!

இதனை தொடர்ந்து இன்று பிக்பாஸ் வீட்டில் 57-வது நாளிற்கான 2-வது ப்ரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. அதில், இந்த வார எவிக்‌ஷனுக்காக நாமினேஷன் நடைபெற்றது. அப்போது ஆயிஷா, ராம் மற்றும் அசீம் பெயரை அதிக அளவில் போட்டியாளர்கள் நாமினேட் செய்கின்றனர்.

முன்னதாக நேற்றைய எபிசோடு இறுதியில் செம்ம டிவிஸ்ட் ஒன்றை கொடுத்துவிட்டு சென்றார் கமல்ஹாசன். அது என்னவென்றால் வரும் வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து இரண்டு பேர் எலிமினேட் செய்யப்படுவார்கள் என அவர் அறிவித்தார். கமலின் இந்த அறிவிப்பு போட்டியாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Bigg Boss Tamil 6