ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டின் தலைவர் யார் தெரியுமா? போட்டியே இவங்க ரெண்டு பேருக்கும்தான் - வெளியானது ப்ரோமோ

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டின் தலைவர் யார் தெரியுமா? போட்டியே இவங்க ரெண்டு பேருக்கும்தான் - வெளியானது ப்ரோமோ

பிக்பாஸ்

பிக்பாஸ்

20 போட்டியாளர்கள் ஏற்கெனவே உள்ள நிலையில் நேற்று மைனா நந்தினி வைல்ட்கார்ட் எண்ட்ரியாக 21-வது நபராக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டின் தலைவருக்கான போட்டி நடைபெறும் ப்ரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் கடந்த 9-ம் தேதி தொடங்கியுள்ளது. இந்நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, அசல் கோலார், ஷிவின் கணேசன், முகமது அசீம், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, ஷெரீனா, மணிகண்ட ராஜேஷ், ரக்ஷிதா மகாலட்சுமி, ராம் ராமசாமி, ஆர்யன் தினேஷ் கனகரத்தினம், ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மகேஸ்வரி சாணக்கியன், வி.ஜே.கதிரவன், குயின்சி ஸ்டான்லி, நிவா,தனலட்சுமி என 20 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

முதல் நாள் பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் 4 கிளப்புகளாக பிரிந்து வீட்டில் உள்ள வேலைகளை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது.

அதில் கிச்சன் டீம் லீடராக ஷிவின் கணேசனும், கிளீனிங் டீம் லீடராக வி.ஜே.கதிரவனும், வெஷல் கிளீனிங் டீம் லீடராக ஜனனியும், டாய்லெட் கிளீனிங் லீடராக அமுதவானனும் செயல்பட்டு வந்தனர்.

மேலும் 20 போட்டியாளர்கள் ஏற்கெனவே உள்ள நிலையில் நேற்று மைனா நந்தினி வைல்ட்கார்ட் எண்ட்ரியாக 21-வது நபராக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார்.

Also read... "தேர்தலில் போட்டியா?" கேள்வி கேட்டதும் படாரன பதிலளித்த கிருத்திகா உதயநிதி!

இந்நிலையில் இன்று இரண்டாவது ப்ரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. அதில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டின் கேப்டன் யார் என்பதை முடிவு செய்ய ஒரு டாஸ்க் ஒன்றை வைக்கின்றனர்.

இந்த டாஸ்கில், ஜிபி முத்து, ஜனனி, சாந்தி ஆகிய மூன்று பேறும் கலந்து கொள்கின்றனர். டாஸ்கின் போது சாந்தி பாதியில் முடித்துக்கொண்டதால் அடுத்ததாக ஜனனி மற்றும் ஜிபி முத்து மட்டுமே டாஸ்க்கில் உள்ளனர். இதனால் இந்த இருவரில் ஒருவர்தான் இந்த வாரத்தில் பிக்பாஸ் வீட்டின் கேப்டனாக தேர்வாக உள்ளார்கள் என்பது தெரியவந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Bigg Boss Tamil 6