நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் கடந்த மாதம் அக்டோபர் 9-ம் தேதி தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, அசல் கோலார், ஷிவின் கணேசன், முகமது அசீம், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, ஷெரீனா, மணிகண்ட ராஜேஷ், ரக்ஷிதா மகாலட்சுமி, ராம் ராமசாமி, ஆர்யன் தினேஷ் கனகரத்தினம், ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மகேஸ்வரி சாணக்கியன், வி.ஜே.கதிரவன், குயின்சி ஸ்டான்லி, நிவா,தனலட்சுமி என 20 போட்டியாளர்கள் பங்கேற்றனர். மைனா நந்தினி வைல்ட்கார்ட் எண்ட்ரியாக 21-வது நபராக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தார்.
முதல் வார இறுதியில் எலிமினேஷன் இல்லாத நிலையில் இரண்டாவது வாரம் இரண்டு பேர் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினர். முதலாவதாக ஜிபி முத்து நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக வீட்டை விட்டு வெளியேறினார். அடுத்ததாக எலிமினேஷன் லிஸ்ட்டில் இருந்த டான்ஸ் மாஸ்டர் சாந்தி குறைவான வாக்குகளை பெற்றதல் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதனை தொடர்ந்து அடுத்த அடுத்த வாரங்களில் தொடர்ந்து அசல், ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட், குயின்சி, ராம், ஆயிஷா, ஜனனி எலிமினேட் செய்யப்பட்ட நிலையில் கடந்த வாரம் தனலட்சுமி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.
தொடர்ந்து மீதம் உள்ள 9 போட்டியாளர்களுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடந்து ஒளிபரப்பபடுகிறது. இந்த வார கேப்டனாக அமுதவாணன் தேர்வான நிலையில் ரச்சிதா தவிற விக்ரமன், அசீம், ஷிவின், கதிரவன், மைனா நந்தினி, மணிகண்டன், ஏடிகே, அமுதவாணன் ஆகியோர் இந்த வார எவிக்ஷனுக்காக நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த வாரம் வீட்டில் உள்ளவர்களுக்கு ஃப்ரீஸ் டாஸ்க் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு சீசனின் போதும் ஃப்ரீஸ் டாஸ்கில் வீட்டில் உள்ள போட்டியாளர்களின் குடும்பங்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்படுவார்கள். அதன் அடிப்படியில் போட்டியாளர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் வீட்டிற்குள் அனுப்பப்பட்டனர்.
#Day82 #Promo2 of #BiggBossTamil #BiggBossTamil6 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #BiggBoss #பிக்பாஸ் #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/US3zJoHQ89
— Vijay Television (@vijaytelevision) December 30, 2022
இதனை தொடர்ந்து இன்று 82-வது நாளிற்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில் ரச்சிதா அசீம் மீது குற்றச்சாட்டை வைக்கும் போது அதை ஏற்கொள்ள முடியாது என்று கூறிய அசீம், சனிக்கிழமை வந்தா மட்டும் ரச்சிதாக்கு புது தைரியமும் உத்வேகமும் வருது என்றும் அடுக்கடுக்காக குற்றச்சாட்டை வைக்கின்றார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bigg Boss Tamil 6