ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

இந்த பிக்பாஸ் ஷோக்கு நீ லாயிக்கு இல்ல... மைனாவை திட்டும் கணவர் யோகி!

இந்த பிக்பாஸ் ஷோக்கு நீ லாயிக்கு இல்ல... மைனாவை திட்டும் கணவர் யோகி!

பிக்பாஸ்

பிக்பாஸ்

இந்த வாரம் வீட்டில் உள்ளவர்களுக்கு ஃப்ரீஸ் டாஸ்க் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு சீசனின் போதும் ஃப்ரீஸ் டாஸ்கில் வீட்டில் உள்ள போட்டியாளர்களின் குடும்பங்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்படுவார்கள். அந்த வகையில் சீசன் 6-ல் உள்ள போட்டியாளர்களின் குடும்பத்தினர் இன்று முதல் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்படுகின்றனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் கடந்த மாதம் அக்டோபர் 9-ம் தேதி தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, அசல் கோலார், ஷிவின் கணேசன், முகமது அசீம், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, ஷெரீனா, மணிகண்ட ராஜேஷ், ரக்ஷிதா மகாலட்சுமி, ராம் ராமசாமி, ஆர்யன் தினேஷ் கனகரத்தினம், ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மகேஸ்வரி சாணக்கியன், வி.ஜே.கதிரவன், குயின்சி ஸ்டான்லி, நிவா,தனலட்சுமி என 20 போட்டியாளர்கள் பங்கேற்றனர். மைனா நந்தினி வைல்ட்கார்ட் எண்ட்ரியாக 21-வது நபராக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தார்.

முதல் வார இறுதியில் எலிமினேஷன் இல்லாத நிலையில் இரண்டாவது வாரம் இரண்டு பேர் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினர். முதலாவதாக ஜிபி முத்து நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக வீட்டை விட்டு வெளியேறினார். அடுத்ததாக எலிமினேஷன் லிஸ்ட்டில் இருந்த டான்ஸ் மாஸ்டர் சாந்தி குறைவான வாக்குகளை பெற்றதல் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதனை தொடர்ந்து அடுத்த அடுத்த வாரங்களில் தொடர்ந்து அசல், ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட், குயின்சி, ராம், ஆயிஷா,  ஜனனி எலிமினேட் செய்யப்பட்ட நிலையில் கடந்த வாரம் தனலட்சுமி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.

தொடர்ந்து மீதம் உள்ள 9 போட்டியாளர்களுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடந்து ஒளிபரப்பபடுகிறது. இந்த வார கேப்டனாக அமுதவாணன் தேர்வான நிலையில் ரச்சிதா தவிற விக்ரமன், அசீம், ஷிவின், கதிரவன், மைனா நந்தினி, மணிகண்டன், ஏடிகே, அமுதவாணன் ஆகியோர் இந்த வார எவிக்‌ஷனுக்காக நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வாரம் வீட்டில் உள்ளவர்களுக்கு ஃப்ரீஸ் டாஸ்க் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு சீசனின் போதும் ஃப்ரீஸ் டாஸ்கில் வீட்டில் உள்ள போட்டியாளர்களின் குடும்பங்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்படுவார்கள். அந்த வகையில் சீசன் 6-ல் உள்ள போட்டியாளர்களின் குடும்பத்தினர் இன்று முதல் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்படுகின்றனர்.

இந்நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டில் 79-வது நாளிற்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. அதில் மைனா நந்தினியின் கணவர் அவரிடம் இந்த பிக்பாஸ் ஷோவிற்கு நீ லாயிக்கில்லை... இந்த பிக்பாஸ் ஷோவிற்கும் உனக்கு தகுதியே இல்ல... புரியுதா அப்படிதான் விளையாடிட்டு இருக்க... நான் சொல்ற பாயிண்ட் தப்புனு நிரூபிச்சு காட்டு... ஒரு தப்பு நடக்கும் போது அத தட்டிக் கேட்கனும். நீ கேக்குறதுக்கு யோசிக்கிற, நம்மள எதாச்சும் பேசுடுவாங்கனு ஒரு பயம் இருக்குல என்று கேட்க அதற்கு மைனா ஆமான் என்று கூறுகிறார்.

Also read... ரஜினியின் அடுத்த படத்தை இயக்கும் 'ஜெய் பீம் ' இயக்குனர்.. தீயாய் பரவும் தகவல்!

அதனை தொடர்ந்து, கேம்மா நீ உன் 100 சதவீதத்தை கொடு, அப்போதான் மக்களுக்கு நீ நல்லா விளையாடுறனு ஒரு தாட் வரும் என்றும் மைனாவின் கணவர் யோகி கூறும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Bigg Boss Tamil 6