ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

அடுக்கடுக்கான கேள்விகளுடன் அசீமை கண்டித்த கமல் - பதிலளிக்க முடியால் நின்ற அசீம்!

அடுக்கடுக்கான கேள்விகளுடன் அசீமை கண்டித்த கமல் - பதிலளிக்க முடியால் நின்ற அசீம்!

பிக்பாஸ்

பிக்பாஸ்

இன்று பிக்பாஸ் வீட்டில் 76-வது நாளிற்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோவில் கமல் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய நிலையில் அதற்கு பதிலளிக்க முடியாமல் அசீமிடம் கைக்கட்டி நிற்பது போல் வெளியாகியுள்ளது.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் கடந்த மாதம் அக்டோபர் 9-ம் தேதி தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, அசல் கோலார், ஷிவின் கணேசன், முகமது அசீம், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, ஷெரீனா, மணிகண்ட ராஜேஷ், ரக்ஷிதா மகாலட்சுமி, ராம் ராமசாமி, ஆர்யன் தினேஷ் கனகரத்தினம், ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மகேஸ்வரி சாணக்கியன், வி.ஜே.கதிரவன், குயின்சி ஸ்டான்லி, நிவா,தனலட்சுமி என 20 போட்டியாளர்கள் பங்கேற்றனர். மைனா நந்தினி வைல்ட்கார்ட் எண்ட்ரியாக 21-வது நபராக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தார்.

முதல் வார இறுதியில் எலிமினேஷன் இல்லாத நிலையில் இரண்டாவது வாரம் இரண்டு பேர் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினர். முதலாவதாக ஜிபி முத்து நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக வீட்டை விட்டு வெளியேறினார். அடுத்ததாக எலிமினேஷன் லிஸ்ட்டில் இருந்த டான்ஸ் மாஸ்டர் சாந்தி குறைவான வாக்குகளை பெற்றதல் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதனை தொடர்ந்து அடுத்த அடுத்த வாரங்களில் தொடர்ந்து அசல், ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட், குயின்சி, ராம்,ஆயிஷா எலிமினேட் செய்யப்பட்ட நிலையில் கடந்த வாரம் ஜனனி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.

தொடர்ந்து மீதம் உள்ள 10 போட்டியாளர்களுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடந்து ஒளிபரப்பபடுகிறது. இந்த வார கேப்டனாக மணிகண்டன் தேர்வான நிலையில், விக்ரமன், ரச்சிதா, அசீம், ஷிவின், கதிரவன், மைனா நந்தினி மற்றும் தனலட்சுமி ஆகியோர் இந்த வார எவிக்‌ஷனுக்காக நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கு கனா காணும் காலங்கள் என்ற டாஸ்க் வழக்கப்பட்டுள்ளது. பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் செவ்வாய் அன்று ப்ரைமரி பள்ளி மாணவர்களாகவும் புதன் அன்று மேல்நிலைப் பள்ளி மாணவர்களாகவும் வியாழன் அன்று கல்லூரி மாணவர்களாகவும்  டாஸ்க்கை செய்தனர்.

Also read... வெண்ணிலா கபடிக் குழு படப் புகழ் மாயி சுந்தர் மரணம்!

இந்நிலையில் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியில், 1 முதல் 10 வரை ரேங்கிங் அடிப்படையில் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் தங்களை வரிசைப்படுத்த பிக்பாஸ் அறிவுருத்துகிறார். அப்போது 5-வது இடத்தில் இருக்கும் ஏடிகேவுக்கும் ஷிவினுக்கும் இடையே சண்டை ஏற்படுகிறது. அதனை தொடர்ந்து முதலாவது இடத்தில் அசீம் நிக்க அவரிடம் விக்ரம் பேச ஆரம்பிக்கும் போது நீங்க கட்டப்பஞ்சாயித்து பன்ன வராந்தீங்க என்று அசீம் கூறுகிறார். இப்படியே தொடர்ந்து அசீம் விக்ரமனிடம் அநாகரீகமாக பேசுவது ஒளிபரப்பப்பட்டது. இதனை தொடர்ந்து கடைசி 9 மற்றும் 10-வது இடத்தில் இருந்த ஷிவின் மற்றும் விக்ரமன் இருவரும் 1 மற்றும் 2-வது இடத்தில் இருந்த அசீம் மற்றும் அமுதவாணவின் ரோபோக்கலாக செயல்பட வேண்டும் என்று பிக்பாஸ் கூறினார்.

இன்று பிக்பாஸ் வீட்டில் 76-வது நாளிற்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் அசீமிடம் கட்டப்பஞ்சாயத்துடைய புரிதல் என்ன என்று கமல் கேள்வி எழுப்புகிறார். மேலும்,  உதாரணம் எடுத்துச் சொன்னது எப்படி கட்டப்பஞ்சாயத்து ஆகும்... நான் கண்டிக்கிறேன் இதுக்கு மேல உங்க கூட வாதாட எனக்கு பொறுமை இல்லை அவ்வளவுதான்.. அவமரியாதை செய்வதற்கு முன்னால் இப்படி ஒரு அவமரியாதை என்ன நோக்கி வச்சுட்டாங்கனா அப்படினு நீங்க யோசிக்கவே இல்லையோனு எனக்கு தோனுது... மத்தவங்களாம் அதுக்கு அவமானப்படுறாங்க ஆனா நீங்க தூசி தட்டுறமாதிரி தட்டி விட்டுறீங்க.. ரௌத்திரம் பழகனுமே தவிற அன்றாட பயிற்சியா வச்சிக்க கூடாது என்று கமல் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்ப அசீம் பதிலளிக்க முடியால் நின்ற வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Bigg Boss Tamil 6