ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

டாஸ்கில் அமுதவாணன் மீது குற்றச்சாட்டு வைக்கும் அசீம் - வெளியானது கலேபர வீடியோ!

டாஸ்கில் அமுதவாணன் மீது குற்றச்சாட்டு வைக்கும் அசீம் - வெளியானது கலேபர வீடியோ!

பிக்பாஸ்

பிக்பாஸ்

இந்த வார கேப்டனாக மைனா நந்தினி தேர்வான நிலையில், விக்ரமன், ரச்சிதா, அசீம், ஜனனி, மணிகண்டன் மற்றும் ஏடிகே ஆகியோர் எவிக்‌ஷனுக்காக நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் கடந்த மாதம் அக்டோபர் 9-ம் தேதி தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, அசல் கோலார், ஷிவின் கணேசன், முகமது அசீம், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, ஷெரீனா, மணிகண்ட ராஜேஷ், ரக்ஷிதா மகாலட்சுமி, ராம் ராமசாமி, ஆர்யன் தினேஷ் கனகரத்தினம், ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மகேஸ்வரி சாணக்கியன், வி.ஜே.கதிரவன், குயின்சி ஸ்டான்லி, நிவா,தனலட்சுமி என 20 போட்டியாளர்கள் பங்கேற்றனர். மைனா நந்தினி வைல்ட்கார்ட் எண்ட்ரியாக 21-வது நபராக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தார்.

முதல் வார இறுதியில் எலிமினேஷன் இல்லாத நிலையில் இரண்டாவது வாரம் இரண்டு பேர் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினர். முதலாவதாக ஜிபி முத்து நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக வீட்டை விட்டு வெளியேறினார். அடுத்ததாக எலிமினேஷன் லிஸ்ட்டில் இருந்த டான்ஸ் மாஸ்டர் சாந்தி குறைவான வாக்குகளை பெற்றதல் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதனை தொடர்ந்து அடுத்த அடுத்த வாரங்களில் தொடர்ந்து அசல், ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட் மற்றும் குயின்சி ஆகியோர் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டனர்.

மேலும் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து இரண்டு பேர் எலிமினேட் செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சனிகிழமை ராம் மற்றும் ஞாயிற்று கிழமை ஆயிஷா எலிமினேட் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் மீதம் உள்ள 11 போட்டியாளர்களுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடந்து ஒளிபரப்பபடுகிறது. இந்த வார கேப்டனாக மைனா நந்தினி தேர்வான நிலையில், விக்ரமன், ரச்சிதா, அசீம், ஜனனி, மணிகண்டன் மற்றும் ஏடிகே ஆகியோர் இந்த வார எவிக்‌ஷனுக்காக நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

Also read... ஏய் சுழலி… அழகி… புடவையில் கலக்கும் நடிகை அனுபமா பரமேசுவரன்!

இந்நிலையில் இந்த வார டாஸ்க்கிற்காக பிக்பாஸ் வீடு சொர்க்கம், நரகம் என்று பிரிந்துள்ளது. போட்டியாளர்கள் இரண்டு அணிகளாக பிரிந்து இந்த டாஸ்கில் பங்கேற்றுள்ளனர். அப்போது நரகத்தில் உள்ளவர்கள் சொர்க்கத்திற்கு வருவதற்காக அவர்களுக்கு பல டாஸ்க்குகள் வழங்கப்படுகின்றது.

இதனை தொடர்ந்து 65-வது நாளிற்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. அதில், நரகத்தில் உள்ள அசீம் சொர்க்கத்தில் உள்ள அமுதவாணன் மீது ஒரு குற்றச்சாட்டை வைக்கிறார். அப்போது ஜனனி மற்றும் தனலட்சுமி நண்பர்கள் என்பதால் அமுதவானன் அவர்களுக்கு வாய்ப்புகளை அதிகமாக வழங்குவதால் மற்றவர்களுக்கு சொர்க்கத்திற்கு செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று கூறினார் அசீம்.

இதனை ஏற்க்கொள்ளாத அமுதவாணன் நான் யாருக்கும் வாய்ப்பு வழங்கவில்லை என்று கூற அவர்களிடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Bigg Boss Tamil 6