ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பிக்பாஸ் வீட்டில் ஷிவினின் திருட்டை கண்டுபிடித்த தனலட்சுமி - வெளியானது வீடியோ!

பிக்பாஸ் வீட்டில் ஷிவினின் திருட்டை கண்டுபிடித்த தனலட்சுமி - வெளியானது வீடியோ!

பிக்பாஸ்

பிக்பாஸ்

இந்த வார கேப்டனாக மணிகண்டன் வெற்றிபெற்ற நிலையில், இந்த வார எலிமினேஷனுக்காக தனலட்சுமி, அசீம், நிவாஷினி, குயின்சி, ராபர்ட், ஆயிஷா, கதிரவன் மற்றும் ஜனனி ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் கடந்த மாதம் அக்டோபர் 9-ம் தேதி தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, அசல் கோலார், ஷிவின் கணேசன், முகமது அசீம், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, ஷெரீனா, மணிகண்ட ராஜேஷ், ரக்ஷிதா மகாலட்சுமி, ராம் ராமசாமி, ஆர்யன் தினேஷ் கனகரத்தினம், ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மகேஸ்வரி சாணக்கியன், வி.ஜே.கதிரவன், குயின்சி ஸ்டான்லி, நிவா,தனலட்சுமி என 20 போட்டியாளர்கள் பங்கேற்றனர். மைனா நந்தினி வைல்ட்கார்ட் எண்ட்ரியாக 21-வது நபராக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தார்.

முதல் வார இறுதியில் எலிமினேஷன் இல்லாத நிலையில் இரண்டாவது வாரம் இரண்டு பேர் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினர். முதலாவதாக ஜிபி முத்து நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக வீட்டை விட்டு வெளியேறினார். அடுத்ததாக எலிமினேஷன் லிஸ்ட்டில் இருந்த டான்ஸ் மாஸ்டர் சாந்தி குறைவான வாக்குகளை பெற்றதல் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதனை தொடர்ந்து அடுத்த அடுத்த வாரங்களில் தொடர்ந்து அசல், ஷெரினா மற்றும் மகேஸ்வரி வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டனர்.

இந்நிலையில் மீதம் உள்ள 16 போட்டியாளர்களுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடந்து ஒளிபரப்பபடுகிறது. இந்த வார கேப்டனாக மணிகண்டன் வெற்றிபெற்ற நிலையில், இந்த வார எலிமினேஷனுக்காக தனலட்சுமி, அசீம், நிவாஷினி, குயின்சி, ராபர்ட், ஆயிஷா, கதிரவன் மற்றும் ஜனனி ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

Also read... நடிகை திஷா பதானியின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்!

பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு இந்த வாரத்திற்கான டாஸ்க் வழங்கப்பட்டது. அதில் ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் 3 அணிகளாக பிரிந்தனர். ராஜ வம்ச அணியில் ராஜாவாக ராபர்ட், ராணியாக ரக்‌ஷிதா, இளவரசராக மணிகண்டன், இளவரசியாக ஜனனி, ராஜ குருவாக விக்ரமன் மற்றும் தளபதியாக அசீம் தேர்வு செய்யப்பட்டனர்.

மியூசியம் கார்ட்ஸ் ஏடிகே, ஆயிஷா, தனலட்சுமி, குயின்சி மற்றும் நிவா தேர்வு செய்யப்பட்டனர். அதனை தொடர்ந்து சேவகர்களாக ஷிவின், கதிரவன், அமுதவாணன் மற்றும் மைனா தேர்வு செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இன்று 39-வது நாளிற்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. அதில், மியூசியத்தில் பாதுகாக்கப்படும் ராஜ வம்சத்தின் பொருட்களை சேவகர் ஷிவின் திருடுவதை மியூசியம் கார்ட் தனலட்சுமி கையும் களவுமாக பிடித்துவிட்டார். ஷிவினுக்கு பிக்பாஸ் அளித்த சீக்ரெட் டாஸ்கை தனலட்சுமி கண்டுபிடித்த மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Bigg Boss Tamil 6