ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

முதலை வாயில கையவிட்ட மாதிரி ஆகிடுச்சு... அசீம் குறித்து பேசும் தனலட்சுமி - வெளியானது வீடியோ!

முதலை வாயில கையவிட்ட மாதிரி ஆகிடுச்சு... அசீம் குறித்து பேசும் தனலட்சுமி - வெளியானது வீடியோ!

பிக்பாஸ்

பிக்பாஸ்

பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியின் 32-வது நாளிற்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு தற்போது வெளியிட்டுள்ளது.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் கடந்த மாதம் அக்டோபர் 9-ம் தேதி தொடங்கியுள்ளது. இந்நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, அசல் கோலார், ஷிவின் கணேசன், முகமது அசீம், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, ஷெரீனா, மணிகண்ட ராஜேஷ், ரக்ஷிதா மகாலட்சுமி, ராம் ராமசாமி, ஆர்யன் தினேஷ் கனகரத்தினம், ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மகேஸ்வரி சாணக்கியன், வி.ஜே.கதிரவன், குயின்சி ஸ்டான்லி, நிவா,தனலட்சுமி என 20 போட்டியாளர்கள் பங்கேற்றனர். மைனா நந்தினி வைல்ட்கார்ட் எண்ட்ரியாக 21-வது நபராக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தார்.

    முதல் வார இறுதியில் எலிமினேஷன் இல்லாத நிலையில் இரண்டாவது வாரம் இரண்டு பேர் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினர். முதலாவதாக ஜிபி முத்து நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக வீட்டை விட்டு வெளியேறினார். அடுத்ததாக எலிமினேஷன் லிஸ்ட்டில் இருந்த டான்ஸ் மாஸ்டர் சாந்தி குறைவான வாக்குகளை பெற்றதல் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதனை தொடர்ந்து அடுத்த அடுத்த வாரங்களில் தொடர்ந்து அசல் மற்றும் ஷெரினா வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டனர்.

    இந்நிலையில் மீதம் உள்ள 17 போட்டியாளர்களுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடந்து ஒளிபரப்பபடுகிறது. இந்த வாரம் பிக்பாஸ் வீட்டின் கேப்டனாக மைனா நந்தினி தேர்வு செய்யப்பட்ட நிலையில், அசீம், ஆயிஷா, விக்ரமன், ஏடிகே, தனலட்சுமி, ராம், மகேஸ்வரி ஆகியோர் எலிமினேஷனுக்காக நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

    Also read... தயவு செஞ்சு தொந்தரவு பண்ணாதீங்க... ரசிகர்களிடம் கோரிக்கை வைத்த சிம்பு!

    இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் டாஸ்க் தொடங்கியதில் இருந்தே போட்டியாளர்களிடையே வாக்குவாதங்களும் பிரச்னைகளும் ஏற்பட்டு வருகின்றது. இந்நிலையில் இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியின் 32-வது நாளிற்கான் இரண்டாவது ப்ரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது.

    அதில், இனிப்புகளை செய்வதற்காக பிக்பாஸ் வீட்டில் கன்வேயர் பெல்ட் மூலம் பொருட்கள் அனுப்பும் போது அந்த பொருட்களை எடுக்க அசீமை அமுதவாணன் தூக்கி பிடித்தும் அசீம் பொருட்களை எடுக்காமல் தவறவிடுகிறார். இதனால் கடுப்பான அந்த டீமின் ஓனர் தனலட்சுமி நேத்து ராம் நம்ம டீமில் எடுத்து தப்பு பண்ணினோம் இன்னைக்கு அசீம நம்ம டீமில் எடுத்து தப்பு பண்ணிட்டோம். முதலை வாயில கையவிட்ட மாதிரி ஆகிடுச்சு என்று அமுதவாணனிடம் புழம்பும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Bigg Boss Tamil 6