ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பாக்ஸ்தான் புடுங்கினேன் தள்ளிவிடல... மணிகண்டனின் பேச்சால் கோபமடைந்த தனலட்சுமி!

பாக்ஸ்தான் புடுங்கினேன் தள்ளிவிடல... மணிகண்டனின் பேச்சால் கோபமடைந்த தனலட்சுமி!

பிக்பாஸ்

பிக்பாஸ்

பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியின் 31-வது நாளிற்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் கடந்த மாதம் அக்டோபர் 9-ம் தேதி தொடங்கியுள்ளது. இந்நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, அசல் கோலார், ஷிவின் கணேசன், முகமது அசீம், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, ஷெரீனா, மணிகண்ட ராஜேஷ், ரக்ஷிதா மகாலட்சுமி, ராம் ராமசாமி, ஆர்யன் தினேஷ் கனகரத்தினம், ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மகேஸ்வரி சாணக்கியன், வி.ஜே.கதிரவன், குயின்சி ஸ்டான்லி, நிவா,தனலட்சுமி என 20 போட்டியாளர்கள் பங்கேற்றனர். மைனா நந்தினி வைல்ட்கார்ட் எண்ட்ரியாக 21-வது நபராக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தார்.

    முதல் வார இறுதியில் எலிமினேஷன் இல்லாத நிலையில் இரண்டாவது வாரம் இரண்டு பேர் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினர். முதலாவதாக ஜிபி முத்து நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக வீட்டை விட்டு வெளியேறினார். அடுத்ததாக எலிமினேஷன் லிஸ்ட்டில் இருந்த டான்ஸ் மாஸ்டர் சாந்தி குறைவான வாக்குகளை பெற்றதல் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதனை தொடர்ந்து அடுத்த அடுத்த வாரங்களில் தொடர்ந்து அசல் மற்றும் ஷெரினா வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டனர்.

    இந்நிலையில் மீதம் உள்ள 17 போட்டியாளர்களுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடந்து ஒளிபரப்பபடுகிறது. இந்த வாரம் பிக்பாஸ் வீட்டின் கேப்டனாக மைனா நந்தினி தேர்வு செய்யப்பட்ட நிலையில், அசீம், ஆயிஷா, விக்ரமன், ஏடிகே, தனலட்சுமி, ராம், மகேஸ்வரி ஆகியோர் எலிமினேஷனுக்காக நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

    Also read... ரசிகர்களை கிரங்கடிக்கும் நடிகை பூணம் பஜ்வாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

    இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் டாஸ்க் தொடங்கியதில் இருந்தே போட்டியாளர்களிடையே வாக்குவாதங்களும் பிரச்னைகளும் ஏற்பட்டு வரும் இன்றைய நாளிற்கான முதல் ப்ரோமோ வீடியோவில், இனிப்பு தயாரிக்க தனலட்சுமி எடுக்கும் பொருளை மணிகண்டன் பிடுங்கி சென்றார். அப்போது தனலட்சுமி மற்றும் மணிகண்டனிடையே பிரச்னை பெரிதாக வீட்டில் உள்ளவர்கள் சமாதானம் செய்தும் அது சரியாகாமல் இருவரும் சண்டைபோடும் வீடியோ வெளியானது.

    அதனை தொடர்ந்து தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் 31-வது நாளிற்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு தற்போது வெளியிட்டுள்ளது. அதில், மணிகண்டன் நான் தனலட்சுமி கையில் இருந்த பாக்ஸ்தான் புடுங்கினேன் அவள தள்ளிவிடலை என்று கூறினார். அப்போது கோபமடைந்த தனலட்சுமி நீ என்ன தள்ளி விடலையா எல்லாம் கேமெரால இருக்கு தெரியும் என்று கத்துகிறார். பொருட்களை திருவது குறித்து மீண்டும் மணிகண்டன் பேச தனலட்சுமி நீ திருடி பார் என்று மேலும் கோவமாக பேசும் வீடியோ வெளியாகியுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Bigg Boss Tamil 6