ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பிக்பாஸ் வீட்டில் அமுதவாணன் விக்ரமனிடையே வாக்குவாதம் - வெளியானது கலேபர ப்ரோமோ

பிக்பாஸ் வீட்டில் அமுதவாணன் விக்ரமனிடையே வாக்குவாதம் - வெளியானது கலேபர ப்ரோமோ

பிக்பாஸ்

பிக்பாஸ்

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டின் கேப்டனாக மைனா நந்தினி தேர்வு செய்யப்பட்ட நிலையில், அசீம், ஆயிஷா, விக்ரமன், ஏடிகே, தனலட்சுமி, ராம், மகேஸ்வரி ஆகியோர் எலிமினேஷனுக்காக நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் கடந்த மாதம் அக்டோபர் 9-ம் தேதி தொடங்கியுள்ளது. இந்நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, அசல் கோலார், ஷிவின் கணேசன், முகமது அசீம், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, ஷெரீனா, மணிகண்ட ராஜேஷ், ரக்ஷிதா மகாலட்சுமி, ராம் ராமசாமி, ஆர்யன் தினேஷ் கனகரத்தினம், ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மகேஸ்வரி சாணக்கியன், வி.ஜே.கதிரவன், குயின்சி ஸ்டான்லி, நிவா,தனலட்சுமி என 20 போட்டியாளர்கள் பங்கேற்றனர். மைனா நந்தினி வைல்ட்கார்ட் எண்ட்ரியாக 21-வது நபராக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தார்.

    முதல் வார இறுதியில் எலிமினேஷன் இல்லாத நிலையில் இரண்டாவது வாரம் இரண்டு பேர் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினர். முதலாவதாக ஜிபி முத்து நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக வீட்டை விட்டு வெளியேறினார். அடுத்ததாக எலிமினேஷன் லிஸ்ட்டில் இருந்த டான்ஸ் மாஸ்டர் சாந்தி குறைவான வாக்குகளை பெற்றதல் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் மூன்றாவது வாரம் அசல் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் நான்காவது வாரமான கடந்த ஞாயிற்று கிழமை ஷெரினா வெளியேற்றப்பட்டார்.

    இந்நிலையில் மீதம் உள்ள 17 போட்டியாளர்களுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடந்து ஒளிபரப்பபடுகிறது. இந்த வாரம் பிக்பாஸ் வீட்டின் கேப்டனாக மைனா நந்தினி தேர்வு செய்யப்பட்ட நிலையில், அசீம், ஆயிஷா, விக்ரமன், ஏடிகே, தனலட்சுமி, ராம், மகேஸ்வரி ஆகியோர் எலிமினேஷனுக்காக நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

    Also read... கம்யூனிஸ்டுகளை எழுச்சிபெற வைத்த மோகன்லாலின் லால் சலாம் படம்!

    நேற்று பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கு ஒரு டாஸ்க் வழங்கப்பட்டது. அதில் போட்டியாளர்கள் இரண்டு அணிகளாக பிரிந்து சாக்கலேட் தயாரித்து விற்பனை செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது. அப்போது அந்த கடைகளுக்கு போட்டியாளர்கள் பெயர் வைத்தனர். ஒன்று கண்ணா லட்டு தின்ன ஆசையா? இன்னொரு கடை பெயர் அடை தேனடை என்று வைத்தனர். பிக்பாஸால் அனுப்பப்படும் பொருட்களை வைத்து அவர்கள் இனிப்புகளை செய்து விற்பனை செய்யுமாறு அந்த டாஸ்கில் அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியின் 30-வது நாளிற்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. இந்த வார டாஸ்க் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதே அமுதவாணன் மற்றும் விக்ரமன் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. அந்த ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Bigg Boss Tamil 6