ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பிக்பாஸ் வீட்டில் குயின்சியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட ஜனனி - வெளியானது வீடியோ!

பிக்பாஸ் வீட்டில் குயின்சியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட ஜனனி - வெளியானது வீடியோ!

பிக்பாஸ்

பிக்பாஸ்

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டின் கேப்டனாக மணிகண்டன் தேர்வு செய்யப்பட்ட நிலையில், அசீம், ஆயிஷா, விக்ரமன், கதிரவன் மற்றும் ஷெரினா ஆகியோர் எலிமினேஷனுக்காக நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் கடந்த மாதம் அக்டோபர் 9-ம் தேதி தொடங்கியுள்ளது. இந்நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, அசல் கோலார், ஷிவின் கணேசன், முகமது அசீம், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, ஷெரீனா, மணிகண்ட ராஜேஷ், ரக்ஷிதா மகாலட்சுமி, ராம் ராமசாமி, ஆர்யன் தினேஷ் கனகரத்தினம், ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மகேஸ்வரி சாணக்கியன், வி.ஜே.கதிரவன், குயின்சி ஸ்டான்லி, நிவா,தனலட்சுமி என 20 போட்டியாளர்கள் பங்கேற்றனர். மைனா நந்தினி வைல்ட்கார்ட் எண்ட்ரியாக 21-வது நபராக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தார்.

    முதல் வார இறுதியில் எலிமினேஷன் இல்லாத நிலையில் இரண்டாவது வாரம் இரண்டு பேர் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினர். முதலாவதாக ஜிபி முத்து நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக வீட்டை விட்டு வெளியேறினார். அடுத்ததாக எலிமினேஷன் லிஸ்ட்டில் இருந்த டான்ஸ் மாஸ்டர் சாந்தி குறைவான வாக்குகளை பெற்றதல் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் மூன்றாவது வாரமான கடந்த ஞாயிறு அன்று அசல் குறைந்த வாக்குகளைப் பெற்று பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

    இந்நிலையில் மீதம் உள்ள 18 போட்டியாளர்களுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடந்து ஒளிபரப்பபடுகிறது. இந்த வாரம் பிக்பாஸ் வீட்டின் கேப்டனாக மணிகண்டன் தேர்வு செய்யப்பட்ட நிலையில், அசீம், ஆயிஷா, விக்ரமன், கதிரவன் மற்றும் ஷெரினா ஆகியோர் எலிமினேஷனுக்காக நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

    Also read... இன்டஸ்ட்ரி ஹிட்டான திரிசூலம் பட வாய்ப்பை மறுத்த பிரபல இயக்குநர்

    இந்நிலையில் இன்று 26-வது நாளிற்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. அதில் குயின்சியின் டவலை ஜனனி எடுத்து பயன்படுத்தியுள்ளார். அதற்கு குயின்சி என் வீட்டில் உள்ளவர்கள் கூட என் டவலை எடுக்க மாட்டார்கள் எனக்கு அது பிடிக்காது என்று கூறுகிறார்.

    அதனை தொடர்ந்து ஜனனி தெரியாம எடுத்துட்டேன் என்று குயின்சியிடம் மன்னிப்பு கேட்டார். ஆனால் குயின்சி தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்ததால் ஜனனி அவரது காலில் விழுந்தும் மன்னிப்பு கேட்கிறார். ஆனால் அப்போதும் குயின்சி அந்த டவல் பிரச்னையை விடாமல் பேசிக்கொண்டிருக்க கடுப்பான ஜனனி கையில் வைத்திருந்த காபி கப்பை கீழே போட்டுவிட்டு தெரியாம பன்னேன், வேணும்னே யாராச்சும் பன்னுவாங்களா என்று கடுப்பாகும் வீடியோ வெளியாகியுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Bigg Boss Tamil 6