ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வேலை செஞ்சாலும் வொர்ஸ்ட் பெர்ஃபார்மர்தான... பிக்பாஸ் ஜெயிலில் இருந்து புலம்பும் அசீம் - வெளியானது ப்ரோமோ!

வேலை செஞ்சாலும் வொர்ஸ்ட் பெர்ஃபார்மர்தான... பிக்பாஸ் ஜெயிலில் இருந்து புலம்பும் அசீம் - வெளியானது ப்ரோமோ!

பிக்பாஸ்

பிக்பாஸ்

வாரம் முழுவதும் டாஸ்க் உட்பட அனைத்து வேலைகளிலும் திருப்தி இல்லாத போட்டியார்கள் இரண்டு பேர் தேர்வு செய்யப்பட்டு பிக்பாஸ் சிறையில் அடைக்க வேண்டும் என்பது பிக்பாஸ் வீட்டில் உள்ள விதிகளில் ஒன்று.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வேலை செஞ்சாலும் வொர்ஸ்ட் பெர்ஃபார்மர்தான, அடுத்த வாரம் நோ வேலை என்று பிக்பாஸ் ஜெயிலில் அசீம் புலம்பும் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் கடந்த 9-ம் தேதி தொடங்கியுள்ளது. இந்நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, அசல் கோலார், ஷிவின் கணேசன், முகமது அசீம், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, ஷெரீனா, மணிகண்ட ராஜேஷ், ரக்ஷிதா மகாலட்சுமி, ராம் ராமசாமி, ஆர்யன் தினேஷ் கனகரத்தினம், ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மகேஸ்வரி சாணக்கியன், வி.ஜே.கதிரவன், குயின்சி ஸ்டான்லி, நிவா,தனலட்சுமி என 20 போட்டியாளர்கள் பங்கேற்றனர். மைனா நந்தினி வைல்ட்கார்ட் எண்ட்ரியாக 21-வது நபராக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தார்.

கடந்த வாரம் இரண்டு பேர் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினர். முதலாவதாக ஜிபி முத்து நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக சனிகிழமை வீட்டை விட்டு வெளியேறினார். அடுத்ததாக எலிமினேஷன் லிஸ்ட்டில் இருந்த டான்ஸ் மாஸ்டர் சாந்தி குறைவான வாக்குகளை பெற்றதல் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் மீதம் உள்ள 19 போட்டியாளர்களுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடந்து ஒளிபரப்பபடுகிறது. இந்த வாரம் பிக்பாஸ் வீட்டின் கேப்டனாக குயின்சி தேர்வு செய்யப்பட்ட நிலையில், அசீம், மகேஸ்வரி, ஆயிஷா, அசல், ரச்சிதா, ஜனனி மற்றும் ஆர்யன் தினேஷ் கனகரத்தினம் எலிமினேஷனுக்காக நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் டாஸ்காக நீயும் பொம்மை, நானும் பொம்மை என்ற கேம் வழங்கப்பட்டது. அந்த டாஸ்கில் வீட்டில் உள்ள 19 போட்டியாளர்களின் பெயர்களும் ஒட்டப்பட்ட பொம்மைகள் கார்டர் ஏரியாவில் அமைக்கப்பட்டது. அதில் போட்டியாளர்கள் தன்னுடைய பெயர் இல்லாமல் மற்றவரின் பெயர் உள்ள பொம்மைய எடுத்து குறிப்பிட்ட இடத்திற்கு கொண்டு சேர்க்க வேண்டும்.

Also read... Ponniyin Selvan Movie in Amazon Prime | பொன்னியின் செல்வன் திரைப்படம் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகிறது - எப்போ தெரியுமா?

ஒவ்வொரு சுற்றிலும் ஒவ்வொறு போட்டியாளர்கள் வெளியேற்றப்படுவார்கள். கடந்த செவ்வாய் கிழமை தொடங்கிய இந்த டாஸ்கால் பிக்பாஸ் வீட்டிற்குள் பல கலவரங்கள் ஏற்பட்டது. இந்த பிரச்னைகளுக்கு எல்லாம் முக்கிய காரணமாக அசீம் இருந்தார் என்பது ரசிகர்களின் கருத்தாக இருந்தது.

இந்நிலையில் இந்த வாரம் முழுவதும் டாஸ்க் உட்பட அனைத்து வேலைகளிலும் திருப்தி இல்லாத போட்டியார்கள் இரண்டு பேர் தேர்வு செய்யப்பட்டு பிக்பாஸ் சிறையில் அடைக்க வேண்டும் என்பது பிக்பாஸ் வீட்டில் உள்ள விதிகளில் ஒன்று.

அந்த வகையில் இன்று 19-வது நாளிற்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், அசீம் மற்றும் ஷிவின் இந்த வாரம் பிக்பாஸ் சிறைக்கும் செல்லும் நபர்களாக அறிவிக்கப்பட்டு அவர்களை ஜெயிலில் அடைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் அசீம், வேலை செஞ்சாலும் வொர்ஸ்ட் பெர்ஃபார்மர்தான, அடுத்த வாரம் நோ வேலை என்று அசீம் புலம்பும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Bigg Boss Tamil 6