ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

என்னமாதிரி அப்பாவியும் கிடையாது.. என்னமாதிரி கெட்டவளும் கிடையாது - ஷெரினாவின் செயலால் கோபமடைந்த ஜனனி!

என்னமாதிரி அப்பாவியும் கிடையாது.. என்னமாதிரி கெட்டவளும் கிடையாது - ஷெரினாவின் செயலால் கோபமடைந்த ஜனனி!

பிக்பாஸ்

பிக்பாஸ்

பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு இந்த வார டாஸ்காக நீயும் பொம்மை, நானும் பொம்மை என்ற கேம் வழங்கப்படுகிறது.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் கடந்த 9-ம் தேதி தொடங்கியுள்ளது. இந்நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, அசல் கோலார், ஷிவின் கணேசன், முகமது அசீம், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, ஷெரீனா, மணிகண்ட ராஜேஷ், ரக்ஷிதா மகாலட்சுமி, ராம் ராமசாமி, ஆர்யன் தினேஷ் கனகரத்தினம், ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மகேஸ்வரி சாணக்கியன், வி.ஜே.கதிரவன், குயின்சி ஸ்டான்லி, நிவா,தனலட்சுமி என 20 போட்டியாளர்கள் பங்கேற்றனர். மைனா நந்தினி வைல்ட்கார்ட் எண்ட்ரியாக 21-வது நபராக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தார்.

கடந்த வாரம் இரண்டு பேர் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினர். முதலாவதாக ஜிபி முத்து தனது குழந்தைகளை பார்க்காமல் இருக்க முடியவில்லை என்று கூறி நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக சனிகிழமை வீட்டை விட்டு வெளியேறினார். அடுத்ததாக கடந்த வாரம் எலிமினேஷன் லிஸ்ட்டில் இருந்த டான்ஸ் மாஸ்டர் சாந்தி குறைவான வாக்குகளை பெற்றதல் சனிகிழமை நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டின் தலைவராக குயின்சி நேற்று தேர்வு செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து நடைபெற்ற எவிக்‌ஷன் நாமினேஷனில் அசீம், மகேஸ்வரி, ஆயிஷா, அசல், ரச்சிதா, ஜனனி மற்றும் ஆர்யன் தினேஷ் கனகரத்தினம் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று 16-வது நாளிற்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. அதில் இந்த வார டாஸ்காக நீயும் பொம்மை, நானும் பொம்மை என்ற கேம் வழங்கப்படுகிறது.

அந்த டாஸ்கில் வீட்டில் உள்ள 19 போட்டியாளர்களின் பெயர்களும் ஒட்டப்பட்ட பொம்மைகள் கார்டர் ஏரியாவில் அமைக்கப்பட்டுள்ளது. அதில் தன்னுடைய பெயர் இல்லாமல் மற்றவரின் பெயர் உள்ள பொம்மைய எடுத்து குறிப்பிட்ட இடத்திற்கு கொண்டு சேர்க்க வேண்டும். அந்த இடத்தில் 18 பொம்மைகள் மட்டுமே வைக்கும் அளவிற்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. மீதம் உள்ள 1 பொம்மையில் யார் பெயர் உள்ளதோ அவர் இந்த போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார் என்று அறிவிக்கப்பட்டது.

Also read... தீபாவளிக்கு அதிக வெள்ளி விழா படங்கள் தந்த கமல்ஹாசன் - எந்தெந்த படம் தெரியுமா?

முன்னதாக வெளியான முதல் ப்ரோமோ வீடியோவில் இந்த டாஸ்க்கை விட்டு மணிகண்டன் வெளியேற்றப்பட்டதாக தெரிந்தது. இந்நிலையில் இந்த இரண்டாவது ப்ரோமோ வீடியோவில் பசர் அடித்த உடன் அனைவரும் பொம்மைகளை எடுத்துக்கொண்டு ஓடும் போது ஷெரினா மட்டும் ஜனனியின் பெயர் உள்ள பொம்மையை எடுத்துக்கொண்டு ஓடாமல் அதே இடத்தில் இருந்தார்.

அதனால் ஜனனி இந்த போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டதாக பிக்பாஸ் அறிவித்தார். இதனைக் கண்டு கோபமடைந்த ஜனனி என்ன யாராவது குத்தனும்னு நினைச்சா என்னமாதிரி கெட்டவ இந்த உலகத்துல யாரும் இருக்காது. என்னமாதிரி அப்பாவியும் கிடையாது, என்னமாதிரி கெட்டவளும் கிடையாது என்று கூறிக்கொண்டிருக்கும் போது, இன்னொரு பக்கம் ஷெரினா ஜனனியை தோற்கடித்ததை கொண்டாடிக் கொண்டிருக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Bigg Boss Tamil 6