ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

நான் பிச்சை எடுப்பனுதான் என் அம்மா நினைச்சாங்க... பிக்பாஸில் கதறி அழுகும் ஷிவின் - வெளியானது வீடியோ!

நான் பிச்சை எடுப்பனுதான் என் அம்மா நினைச்சாங்க... பிக்பாஸில் கதறி அழுகும் ஷிவின் - வெளியானது வீடியோ!

ஷிவின்

ஷிவின்

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் அசீம், தனலட்சுமி, நிவாஷினி, ஜனனி ஆகியோர் கதை கூறியபோது, தனலட்சுமி மற்றும் நிவா கதையை முழுமையாக சொல்லி முடித்தனர்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நான் பிச்சை எடுப்பனுதான் என் அம்மா நினைச்சாங்க என்று பிக்பாஸில் ஷிவின் கதறி அழுகும் வீடியோ வெளியாகியுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் கடந்த 9-ம் தேதி தொடங்கியுள்ளது. இந்நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, அசல் கோலார், ஷிவின் கணேசன், முகமது அசீம், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, ஷெரீனா, மணிகண்ட ராஜேஷ், ரக்ஷிதா மகாலட்சுமி, ராம் ராமசாமி, ஆர்யன் தினேஷ் கனகரத்தினம், ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மகேஸ்வரி சாணக்கியன், வி.ஜே.கதிரவன், குயின்சி ஸ்டான்லி, நிவா,தனலட்சுமி என 20 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

பிக்பாஸில் பொதுவாக 40 நாட்களை கடந்து வரும் சண்டைகள் அனைத்தும் இந்த சீசனின் முதல் இரண்டு நாட்களிலேயே தொடங்கிவிட்டது. இதற்கு சனிகிழமை நடந்த எபிசோடில் கமல் வாழ்த்துகளையும் தெரிவித்தார். மேலும் 20 போட்டியாளர்கள் ஏற்கெனவே உள்ள நிலையில்நேற்று மைனா நந்தினி வைல்ட்கார்ட் எண்ட்ரியாக 21-வது நபராக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார்.

மேலும் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டின் கேப்டனாக ஜிபி முத்து தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த வார எலிமினேஷன் லிஸ்டில் ஆயிஷா, அசீம், தனலட்சுமி, மகேஸ்வரி, நிவா, குயின்சி, ரச்சிதா, ராம், சாந்தி, ஷெரினா, ஷிவின், விக்ரமன் ஆகியோர் உள்ளனர்.

இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவருக்கும் ஒரு டாஸ்க் வழங்கப்படுகிறது. அதன் பெயர் ஒரு கத சொல்லட்டுமா? அதில், போட்டியாளர்கள் அனைவருக்கும் ஒரு நிமிடம் வழங்கப்படுகிறது அதற்குள் அவர்கள் வீட்டில் உள்ள மற்ற போட்டியாளர்களை கவரும் வகையில் கதையை கூற வேண்டும் அவ்வாறு கூறவில்லை என்றால் ப்ளாஸ்மா முன்பு உள்ள 3 பசர்களை அழுத்தி கதைய நிறுத்திவிடவும் செய்யலாம்.

கதையை நிறுத்தாமல் யார் சொல்லி முடிக்கிறார்களோ அவர்கள் நாமினேஷனில் இருந்து வெளியேற வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் அசீம், தனலட்சுமி, நிவாஷினி, ஜனனி ஆகியோர் கதை கூறியபோது, தனலட்சுமி மற்றும் நிவா கதையை முழுமையாக சொல்லி முடித்தனர்.

ஆனால் அசீம் மற்றும் ஜனனி ஆகியோர் கதை சொல்லும் போது அவர்களை கதை சொல்லவிடாமல் மற்ற போட்டியாளர்கள் நிறுத்தினர்.

Also read... கல்ஃப் நாடுகளில் மோகன்லாலின் ’மான்ஸ்டர்‘ படத்திற்கு தடை - இதுதான் காரணம்!

இந்நிலையில் இன்று 10-வது நாளிற்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. அதில் ஷிவின் கணேஷன் தனது கதையை கூறுகிறார். அப்போது, என் அம்மா எனக்கு வேலையே கிடைக்காது நான் பிச்சை தான் எடுப்பனு நினைச்சு என்ன சிங்கப்பூருக்கு அனுப்பி வச்சாங்க. நானும் எந்த தப்பும் பன்னல என் அம்மாவும் எந்த தப்பும் பன்னல, என்னோட ஜெண்டர் பிரச்னைனால நான் என் அம்மாவ பிரிஞ்சி இருக்கனுமா? நான் கண்டிப்பா இந்தியா வருவேன் என் அம்மாவ பாத்துப்பேனு சொன்னேன். அதோட அம்மா என்கிட்ட பேசுறது இல்லனும் ஷிவின் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், காசு இல்லாம படிப்பும் இல்லாம இன்னும் தவிச்சுட்டு இருக்கவங்களோட நிலைமை மாறனும்னா என்ன மாதிரி இருக்கவங்களோட ஸ்டோரிஸ் இந்த சமூகத்துல கேட்கப்படனும்னு நினைத்து நான் எடுத்த ஒரு பெரிய முடிவுதான் இந்த பிக்பாஸ் என்று ஷிவின் அழுதுக் கொண்டே பேசும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Bigg Boss Tamil 6